OnePlus 9RT, OnePlus Buds Z2 சிறந்த அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம்

OnePlus 9RT ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமரா அமைப்புடன், வலுவான பேட்டரி திறன் மற்றும் சிறந்த செயல்திறன் அனுபவமும் கிடைக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 14, 2022, 07:37 PM IST
OnePlus 9RT, OnePlus Buds Z2 சிறந்த அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம் title=

OnePlus 9RT நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இறுதியாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 செயலியில் வேலை செய்கிறது மற்றும் புகைப்படம் எடுப்பதற்காக 50எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதனுடன், நிறுவனம் OnePlus Buds Z2 உண்மையான வயர்லெஸ் ஸ்டீரியோவை (TWS) சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இரண்டு சாதனங்களின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

OnePlus 9RT, OnePlus Buds Z2: விலை மற்றும் பிற தகவல்கள்
OnePlus 9RT இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் அதன் அடிப்படை மாடல் விலை ரூ.42,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 8ஜிபி ரேம் உடன் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கிடைக்கும். மறுபுறம், 12 ஜிபி ரேம் உடன் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது, இதன் விலை ரூ.46,999 ஆகும். 

ALSO READ | வெறும் 5 ஆயிரத்திற்கு Vivo 5G Smartphone வாங்க அறிய வாய்ப்பு

இந்த ஸ்மார்ட்போன் (Smartphone) ஹேக்கர் பிளாக் மற்றும் நானோ சில்வர் வண்ண வகைகளில் கிடைக்கும். நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தவிர, இது ஈ-காமர்ஸ் தளமான Amazon இல் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஜனவரி 17 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் தொடங்கும்.

OnePlus Buds Z2 பற்றி பேசுகையில், இது சந்தையில் ரூ.4,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு வண்ண வகைகளில் வாங்கலாம். இந்த சாதனம் ஜனவரி 18 முதல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் Amazon மற்றும் Flipkart ஆகியவற்றில் விற்பனைக்கு கிடைக்கும்.

ALSO READ | Apple இன் Surgical Strike ! Xiaomi, Vivo மற்றும் OPPO க்கு ஆப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News