கூகுள் குரோம்மின் ஒற்று கேட்பதை எப்படி நிறுத்துவது?

Last Updated : Jun 4, 2016, 01:56 PM IST
கூகுள் குரோம்மின் ஒற்று கேட்பதை எப்படி நிறுத்துவது? title=

உங்களுக்கு தெரியுமா கூகுள் 'குரோம்' என்ற சேவை வழங்கி வருகிறது, அந்த குரோம் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு கணினியில் இருந்து நமது உரையாடல்கள் கடத்தப்படுகின்றன என்று? கடத்தப்பட்ட உரையாடல்கள் கூகிள் நிறுவனத்துக்கு அனுப்படுகின்றன.

தனது மொழி அங்கீகாரம் மற்றும் தேடல் கருவிகளை  மேம்படுத்த இவை உதவும் என கூகிள் நிறுவனம் இதற்கான காரணத்தை கூறுகிறது.

இதற்கும் தீர்வு உண்டு. நீங்கள் பயப்பட தேவையில்லை. உங்கள் வார்த்தைகள் மற்றும் உரையாடல்கள் கூகுள் குரோம் கேட்கவோ திருடவோ வேண்டாம் என்று நீங்கள் நினைத்தால் அன்றாடும் நீங்கள் கணினியில் தேடும் அனைத்துவிதமான தொடர்புகளை அழிக்க வேண்டும் மேலும் குரல் மூலம் தேடலை தவிர்க்க வேண்டும்.

இதை கட்டுப்படுத்த நீங்கள் ஆக்டிவிட்டி கண்ரோல் பக்கத்திற்கு சென்று கூகுள் அக்கவுன்ட் ஆன் செய்ய வேண்டும். அங்கு குறிப்பிட்டு இருக்கும் குரல் தேடல் பட்டனை ஆப் செய்யவும். இப்படி செய்தால் உங்கள் உரையாடல் மற்றும் குரல் தேடல் அனைத்தும் அங்கு பதிவு ஆகாது. அதன் பிறகு உங்கள் உரையாடல்கள் கடத்தப்பட மாட்டாது.

Trending News