வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 'ஜிசாட்-31' செயற்கைக்கோள்!!

இஸ்ரோவின் 40-வது தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்-31 செயற்கைகோள் வெற்றிகரமா விண்ணில் பாய்ந்தது.

Last Updated : Feb 6, 2019, 08:23 AM IST
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 'ஜிசாட்-31' செயற்கைக்கோள்!! title=

இஸ்ரோவின் 40-வது தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்-31 செயற்கைகோள் வெற்றிகரமா விண்ணில் பாய்ந்தது.

தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்தும் வகையில் ஜிசாட் - 31 என்ற 40வது செயற்கைக்கோளை இஸ்ரோ ஏவ திட்டமிட்டது. இதன்படி பிரான்ஸ் நாட்டின், பிரெஞ்ச் கயானாவில் இருந்து, ஏரியான் - 5 ராக்கெட் மூலம் இன்று அதிகாலை 2.31 மணியளவில் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

பூமியில் இருந்து 14,638 கிலோ மீட்டர் தொலைவில் இந்த செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரெஞ்ச் கயானாவில் இருந்த விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கட்டிஅணைத்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

2,600 கிலோ எடையுள்ள ஜிசாட்-31 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் என இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் பெருநிலப் பகுதிகளிலும், தீவுகளிலும் இணையத் தொடர்புக்கு உதவும் வகையில் இந்த செயற்கைக் கோளில் மல்டி-ஸ்பாட் பீம் ஆண்டெனா உள்ளது.

அதன் மூலம் விசாட் நெட்வொர்க், தொலைக்காட்சி சேவைகள், டிஜிட்டல் செய்தி சேகரிப்பு, டி.டி.ஹெச் சேவை, செல்போன் சேவை ஆகியவற்றை அதிவேகத்தில் பெற முடியும் என்றும், அகண்ட அலைவரிசைக்கான இன்றியமையாத சேவையை வழங்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

Trending News