காதலர் தின ஸ்பெஷல்! VIVO V7 Plus-ன் புதிய அறிமுகம்!!

VIVO V7 Plus போன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போன் champagne gold, matte black நிறங்களில் அறிமுகமானது.

Last Updated : Feb 6, 2018, 11:26 AM IST
காதலர் தின ஸ்பெஷல்! VIVO V7 Plus-ன் புதிய அறிமுகம்!!

VIVO V7 Plus போன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போன் champagne gold, matte black நிறங்களில் அறிமுகமானது.

இந்நிலையில் VIVO V7 Plus ஸ்மார்ட்போனின் இன்ஃபனைடே ரெட் நிற ஸ்மார்ட்போன் காதலர் தினத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  பிரபல வடிவமைப்பாளரான மனிஷ் மல்ஹோத்ராவுடன் இணைந்து இந்த புதிய லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் VIVO V7 Plus இன்ஃபனைட் ரெட் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.22,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் அமேசான் வலைத்தளத்திலும், ஆஃப்லைன் முறையிலும் விற்பனை செய்யப்படுகிறது. 

புதிய ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு புக் மை ஷோ, ஃபெர்னஸ் என் பெட்டல் வழங்கும் சிறப்பு கூப்பன்கள் மற்றும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.3000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

More Stories

Trending News