IPL 2019: வாட்ஸ்அப்பில் IPL ஸ்டிக்கர்கள் அறிமுகம்!!

IPL கிரிக்கெட் தொடரை கொண்டாடும் வகையில் WhatsApp-ல் IPL ஸ்டிக்கர்கள் சேர்க்கப்படுகிறது.

Last Updated : May 1, 2019, 12:13 PM IST
IPL 2019: வாட்ஸ்அப்பில் IPL ஸ்டிக்கர்கள் அறிமுகம்!! title=

IPL கிரிக்கெட் தொடரை கொண்டாடும் வகையில் WhatsApp-ல் IPL ஸ்டிக்கர்கள் சேர்க்கப்படுகிறது.

WhatsApp செயலியில் தற்சமயம் IPL கிரிக்கெட் தொடர் சார்ந்த சிறப்பு ஸ்டிக்கர்கள் சேர்க்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பம்சம் ஆண்ட்ராய்டு தளத்தில் வழங்கப்படுகிறது. விரைவில் ஐபோன் பயனர்களுக்கும் இந்த ஸ்டிக்கர்கள் வழங்கப்பட இருக்கிறது.

WhatsApp செயலியில் ஸ்டிக்கர் அம்சம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இவற்றை டவுன்லோடு செய்தபின் பயனர்கள் அவற்றை வாட்ஸ்அப் காண்டாக்ட்களுக்கு அனுப்ப முடியும்.

இந்த பேக்களில் கிரிக்கெட் சார்ந்த பல்வேறு ஸ்டிக்கர்கள் இடம்பெற்றிருக்கும். இவை WhatsApp ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.19.115 பதிப்பில் பெறலாம்.

Trending News