Jio Fiber திட்டம்: Netflix, Amazon Prime என அனைத்தும் இலவசம், இன்னும் பல நன்மைகள்

Jio Fiber Plan: வழக்கமான அம்சங்களுடன் அதிகம் விரும்பும் பயனர்களுக்கு இந்த திட்டம் நல்லதொரு திட்டமாக இருக்கும். இதில் மற்ற திட்டங்களை ஒப்பிடுகையில் பல வகையான சிறப்பம்சங்கள் உள்ளன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 22, 2022, 01:02 PM IST
  • ஓடிடி உடன் ஜியோ ஃபைபர் இலவச பலன்கள்.
  • இந்த திட்டத்தில், பயனர்கள் டாப் (ஓடிடி) தளங்களில் இலவச சந்தாவைப் பெறுகிறார்கள்.
  • மொத்தம் 17 சந்தாக்கள் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.
Jio Fiber திட்டம்: Netflix, Amazon Prime என அனைத்தும் இலவசம், இன்னும் பல நன்மைகள் title=

ஓடிடி உடன் ஜியோ ஃபைபர் இலவச பலன்கள்: நீங்கள் ஜியோ ஃபைபரைப் பயன்படுத்தும் வாடிக்கையாளராக இருந்து, உங்களுக்கு சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பயனர்களுக்கு அதிகப்படியான நன்மைகளை அளிக்கவல்ல ஒரு சக்திவாய்ந்த திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். மற்ற திட்டங்களை விட இந்த திட்டங்களின் சிறப்பம்சங்கள் பற்றிய விரிவான அலசலை இந்த பதிவில் காணலாம். இந்த சிறப்பம்சங்கள் மற்ற திட்டங்களில் இல்லை என்பது குறிப்பிட்டத்தக்கது. 

இந்த திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

நாம் இப்போது காணப்போகும் திட்டம் ஜியோவின் ரூ. 1499 திட்டமாகும். இதில் பயனர்களுக்கு பல வலுவான நன்மைகள் வழங்கப்படுகின்றன. இவை மிகவும் லாபகரமானதாக இருக்கும். இதில், பயனர்களின் தேவைகள் கவனிக்கப்படுவதோடு, இந்த திட்டத்தின் மூலம், பயனர்களின்  பொழுதுபோக்குக்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் நன்மைகள் தொடர்பான ஒவ்வொரு விவரங்களையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இவை இணையத்தை பயன்படுத்தும் அனைவரும், பிராட்பேண்ட்டின் அனைத்து பயனர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களாகும். 

மேலும் படிக்க | Amazon Prime Day Sale: பொருட்களை வாங்க சூப்பரான டிப்ஸ்! பணத்தை மிச்சப்படுத்துங்கள்

என்ன நன்மைகள் சேர்க்கப்பட்டுள்ளன

இந்தத் திட்டத்தில் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி நாம் பேசினால், முதலில் வருவது இந்த திட்டத்தில் கிடைக்கும் ஒரு மாதத்திற்கான அதாவது 30 நாட்களுக்கான செல்லுபடியாகும். 30 நாட்களுக்கு பயனர்கள் வரம்பில்லாமல் இணையத்தைப் பயன்படுத்தலாம். இதில் எந்த அளவுகோலும் இல்லை. 

இது மட்டுமின்றி இந்த திட்டத்தில் 300 எம்பிபிஎஸ் வேகமும் கிடைக்கும். இந்த வேகத்தின் உதவியால், பெரிய கனமான கோப்புகளையும் சில நிமிடங்களில் பதிவிறக்கம் செய்து விட முடியும். இதன் மூலம் இலவச அன்லிமிடெட் குரல் அழைப்பையும் பெறலாம். 

இலவச ஓடிடி சந்தா சேர்க்கப்பட்டுள்ளது

இப்போது இந்த திட்டத்தின் சிறப்பம்சம் பற்றி காணலாம். இந்த சிறப்பம்சங்கள் காரணமாக, மற்ற திட்டங்களை ஒப்பிடும்போது இந்த திட்டம் தனித்து காணப்படுகின்றது. இந்த திட்டத்தில், பயனர்கள் டாப் (ஓடிடி) தளங்களில் இலவச சந்தாவைப் பெறுகிறார்கள். இந்த சந்தாக்களில் நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் உட்பட இந்தியாவின் இரண்டு பெரிய ஓடிடி இயங்குதளங்களும் அடங்கும். இவை உட்பட மொத்தம் 17 சந்தாக்கள் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. எனவே ஒட்டுமொத்தமாக, வழக்கமான அம்சங்களுடன் அதிகம் விரும்பும் பயனர்களுக்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Amazon Prime Day 2022: தள்ளுபடி மழை, அனைத்து பொருட்களிலும் பம்பர் சலுகைள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News