மொபைலில் 2 சிம் கார்ட் வைத்துள்ளீர்களா? வந்துவிட்டது புதிய பிரச்சனை!

டிசம்பர் 2021ம் ஆண்டு ரீசார்ஜ் திட்டங்களின் விலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : May 6, 2024, 06:53 AM IST
  • சிம் கார்ட் தொடர்பான விதிகள் வந்துள்ளது.
  • 2 சிம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பிரச்சனை.
  • ஜியோ, ஏர்டெல், VIயின் புதிய திட்டம்!
மொபைலில் 2 சிம் கார்ட் வைத்துள்ளீர்களா? வந்துவிட்டது புதிய பிரச்சனை!  title=

தற்போது சந்தையில் கிடைக்கும் அனைத்து ஆண்ட்ராய்டு போன்களிலும் இரண்டு சிம் கார்டுகள் போடும் வசதி உள்ளது.  அதாவது ஒரு பயனர் ஒரே சமயத்தில் இரண்டு சிம்களைப் பயன்படுத்த முடியும். இருப்பினும், வரும் நாட்களில் 2 சிம் கார்டுகளை வைத்திருப்பது மிகப்பெரிய பிரச்சனையாக மாறும். காரணம் ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்ந்ததாக இருக்கும். இது தொடர்பாக, ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா இணைந்து புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளன. தொலைத்தொடர்புத் துறையில் வரும் நாட்களில் ரீசார்ஜ் திட்டங்களின் விலை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என்று நீண்ட நாட்களுக்கு முன்பே தகவல்  வெளியானது. முன்னதாக டிசம்பர் 2021ல் ரீசார்ஜ் கட்டணங்களின் விலை அதிகரிக்கப்பட்டது.  

மேலும் படிக்க | ஹோட்டல் ரூம் தேடி அழைய தேவையில்லை! ரயில்வே ஸ்டேஷனில் 100 ரூபாய்க்கு தங்கலாம்

இந்நிலையில், தற்போது இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகி உள்ள நிலையில் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் திட்டங்களில் எந்த மாற்றமும் இல்லை. இந்நிலையில், அடுத்த சில மாதங்களில் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்கள் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரிக்கலாம் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இது பலருக்கும் அதிக செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும், போனில் இரண்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்தி வருபவர்களுக்கு மேலும் பிரச்சனைகளை அதிகரிக்கலாம். ஏனெனில் இரண்டாவது சிம்மை செயலில் வைத்திருக்க அதிக விலைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும்.

நம்மில் பலரும் ஒரு நம்பரை மெயினாக வைத்து கொண்டு, இன்னொரு நம்பரை அவசர தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தி வருகிறோம். தற்போது, ​​ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா சிம்மை செயலில் வைத்திருக்க குறைந்தபட்சம் ரூ.150 ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஆனால் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்தால் சிம்மை செயலில் வைத்திருக்க ரூ.150க்குப் பதிலாக ரூ.180 முதல் ரூ.200 வரை செலுத்த வேண்டியிருக்கும். இதனால் இரண்டு சிம்களை பயன்படுத்தி வருபவர்கள் 28 நாட்களுக்கு குறைந்தபட்சம் ரூ.400 மாதாந்திர ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

ரீசார்ஜ் திட்டங்களின் விலை எவ்வளவு உயரும்?

மாதந்தோறும் ரூ.300க்கு ரீசார்ஜ் செய்தால், கட்டண உயர்வுக்குப் பிறகு மாதத்திற்கு சுமார் ரூ.75 அதிகமாகச் செலுத்த வேண்டியிருக்கும். மாதந்தோறும் ரூ.500 ரீசார்ஜ் செய்தால் ரூ.125 கூடுதலாக செலுத்த வேண்டும். ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் விரைவில் 5G ரீசார்ஜ் திட்டத்தை பெரியளவில் அறிமுகப்படுத்தலாம். இது ஏர்டெல் தனது 5ஜி சேவையை இலவசமாக வழங்கி வருகிறது. இந்நிலையில், நீங்கள் ஒரு சிம் 5ஜி மற்றும் ஒரு சிம் 4ஜி வைத்திருந்தால், விலை உயர்வுக்கு பிறகு உங்கள் மாதாந்திர செலவு சுமார் 50 சதவீதம் அதிகரிக்கும். ஏனெனில் 5ஜி திட்டத்தின் விலை 4ஜியை விட அதிகமாக இருக்கும்.

மேலும் படிக்க | ஒருவருக்கு எத்தனை வங்கி கணக்குகள் இருக்கலாம்? ஆர்.பி.ஐ கூறுவது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News