Cricket Jio Data Recharge Plans In Tamil: இந்தியாவில் இப்போது என்ன சீசன் என கேட்டால் எல்லாம் மூன்று சீசன்களை சொல்வார்கள் எனலாம், அதிலும் கடைசியாகதான் சம்மர் சீசனை கூறுவார்கள். முதலில் ஐபிஎல் சீசன், அடுத்த தேர்தல் சீசன் அதன்பின்னர்தான் சம்மர் சீசன். நாடு முழுவதும் உள்ள அனைவரும் அடுத்த இரண்டு மாதங்கள் இந்த மூன்று சீசன்களையும் எதிர்கொள்ள உள்ளனர். இதில் முதலில் கூறியதுபோல், கிரிக்கெட்டுக்கே இங்கு முன்னுரிமை. அடுத்துதான் தங்களின் பிரதமரை தீர்மானிக்கும் தேர்தல்...
அந்த அளவிற்கு ஐபிஎல் சீசன் (IPL 2024) உச்சத்தில் இருக்கிறது. ஐபிஎல் தொடரை கடந்தாண்டை போலவே தொலைக்காட்சியில் என்றால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) சேனலிலும், ஓடிடி என்றால் ஜியோ சினிமாஸ் (Jio Cinemas) தளத்திலும் பார்க்கலாம். இதில் ஜியோ சினிமாஸ் தளத்தில் இலவசமாகவே பார்க்கலாம். அதற்கு என சந்தாவோ எதுவும் தேவையில்லை. ஒருவேளை நீங்கள் ஜியோ சினிமாஸில் சந்தா செலுத்துபவராக இருந்தால், HDல் நீங்கள் போட்டிகளை பார்க்கும் வசதி இருக்கும். அதேபோல், மொபைல், ஸ்மார்ட் டிவி, லேப்டாப், டேப்லட் என பல சாதனங்களிலும் நீங்கள் ஜியோ சினிமாஸ் மூலம் ஐபிஎல் தொடரை கண்டுகளிக்கலாம்.
டேட்டா பெரிய பிரச்னை
ஒரு இதில் இருக்கும் ஒரே ஒரு பிரச்னை என்னவென்றால் உங்களிடம் இருக்கும் மொபைல் டேட்டா எனலாம். ஒரு ஐபிஎல் போட்டி சுமார் 3 - 3.5 மணிநேரங்கள் வரை நடக்கும். இதனை நீங்கள் சாதரண வீடியோ குவாலிட்டியில் பார்த்தாலும் குறைந்தது 3ஜிபி முதல் 3.5 ஜிபி வரை தேவைப்படும் எனலாம். அந்த வகையில், வீட்டில் வைஃபை அல்லது வயர்லெஸ் இணைய சேவை இருந்தால் பிரச்னை இல்லை.
மேலும் படிக்க | ஜியோ அசந்த கேப்புல 170 ரூபாய் பிளானை இறக்கிய வோடாஃபோன் ஐடியா..!
ஒருவேளை மொபைல் டேட்டாவில் நீங்கள் பார்த்தால் உங்களின் ரீசார்ஜ் பிளானில் உள்ள டேட்டாவில்தான் பார்க்க முடியும். மேலும், உங்களின் ஒருநாள் டேட்டா வரம்பு தீர்ந்துவிட்டால் கூடுதல் டேட்டாவுக்காக நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டியது வரும். அதிலும் நீங்கள் 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருந்து ஜியோ, ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்தால் உங்களுக்கு டேட்டா சார்ந்த பிரச்னையே இருக்காது. ஏனென்றால் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி இணைய சேவையை வரம்பற்ற வகையில் வழங்கி வருகின்றன.
ஜியோவின் ஐடியா
இந்நிலையில், ஐபிஎல் போட்டியை ரசிகர்கள் பிரச்னையின்றி பார்ப்பதற்காகவே ஜியோ நிறுவனம் பிரத்யேக கிரிக்கெட் சார்ந்த இரண்டு டேட்டா ரீசார்ஜ் பிளான்களை (Cricket Data Recharge Plans) அறிமுகப்படுத்தி உள்ளது. ஜியோவின் ரூ.667 ரீசார்ஜ் பிளான் மற்றும் ரூ.444 ரீசார்ஜ் பிளான் கிரிக்கெட்டுக்கு என்றே கொண்டுவரப்பட்ட டேட்டா ரீசார்ஜ் திட்டங்களாகும். அந்த வகையில் இந்த இரண்டு திட்டங்கள் குறித்து ஐபிஎல் ரசிகர்கள் இங்கு தெரிந்துகொள்ளலாம்.
கிரிக்கெட் டேட்டா பிளான்கள்
ஜியோவின் (Jio) ரூ.667 ரீசார்ஜ் பிளான் என்பது 90 நாள்கள் வேலிடிட்டியாகும். இது டேட்டா பிளான் ஆகும், இதில் வாய்ஸ் காலிங் மற்றும் எஸ்எம்எஸ் சார்ந்த பலன்கள் கிடைக்காது. எனவே, நீங்கள் அடிப்படை ரீசார்ஜ் பிளானை வைத்திருந்தால் இந்த டேட்டா பிளானை பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் 90 நாள்களுக்கு 150 ஜிபி வழங்கப்படுகிறது. இதன்மூலம், நீங்கள் ஐபிஎல் வெறியர் என்றால் ஒருமுறை ரீசார்ஜ் செய்தாலே தொடர் முழுவதும் நீங்கள் பார்த்து மகிழ்ந்துகொள்ளலாம். அதே சற்றே குறைந்த பட்ஜெட்டில் கேட்டால், ரூ.444 ரீசார்ஜ் பிளான் 60 நாள்களுக்கு உள்ளது. இதில் 100ஜிபி டேட்டா கிடைக்கும். இதுவும் டேட்டா பிளான்தான்.
வரும் மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்க உள்ளது. முதற்கட்டமாக இந்த தொடரின் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே தற்போதுவரை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால், விரைவில் மீதம் உள்ள போட்டிகளுக்கான அட்டவணைகள் அறிவிக்கப்படும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஏப். 19ஆம் தேதியோடு தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவுபெற்றுவிடும் என்பதால் பிளேஆப் சுற்று போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுவதில் சிக்கல் ஏதும் இருக்காது என்பது சிஎஸ்கே ரசிகர்களுக்கு கூடுதல் நற்செய்தியாகும்.
மேலும் படிக்க | ஏர்டெலின் அசத்தல் ஹோலி ஆபர்! 1000 ஜிபி 5ஜி டேட்டா இலவசம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ