நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, சியோமியின் முதன்மை, Mi 10 இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
பெரும் எதிர்பார்க்கு மத்தியில் வெளியான இந்த தொலைப்பேசியை வாங்குவதற்கான முன்பதிவு இம்மாத முற்பகுதியில் தொடங்கியுள்ளது. எனினும், இன்று முதல் Mi 10 நாட்டில் விற்பனைக்கு வந்துள்ளது, மேலும் mi.com, amazonindia மற்றும் சில்லறை கடைகள் உட்பட தளங்களில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சிறப்பு கால விறபனையில் நிறுவனம் Mi 10 உடன், Mi வயர்லெஸ் பவர்பேங்கை இலவசமாக வழங்குகிறது. மேலும் HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,000 கேஷ்பேக்கையும் அளிக்கிறது. அதேவேளையில் முன்னணி வங்கிகள் மூலம் செலுத்தப்படும் கட்டணங்களுக்கு வட்டி இல்லா மாத தவனையினையும் நிறுவனம் அளிக்கிறது.
சியோமி இந்தியாவில் Mi 10 ஸ்மார்ட்போனினை 8GB LPDDR5 ROM மற்றும் 128 GB/ 256 GB சேமிப்புடன் இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. தொலைபேசியின் நுழைவு மாறுபாடு ரூ.49,999-க்கும், உயர் மாறுபாடு ரூ.54,999-க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பவள பச்சை மற்றும் ட்விலைட் கிரே ஆகிய இரு வண்ணங்களில் தற்போது இந்த சாதனம் கிடைக்கும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நேரத்தில் இது இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த ஷியோமி ஸ்மார்ட்போன் என்றாலும், சந்தையில் போட்டியிடும் மற்ற நிறுவன தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது இது இன்னும் சாதகமாக அமர்ந்திருக்கிறது.
Mi 10 பற்றி சில முக்கிய தகவல்கள்...
- 6.67-inch 1080p AMOLED திரை
- 5G பேஸ்பேண்ட் ஆதரிக்கும் வகையில் Qualcomm Snapdragon 865 chipset
- Octa Core, 2.84GHz Processor
- 12GB LPDDR5 RAM மற்றும் 256GB நினைவகம்.
- Dual Sim, 3G, 4G, 5G, VoLTE, Wi-Fi, NFC, IR Blaster
- 108MP Quad Rear மற்றும் 20MP Front Camera
- Android v10.0 இயங்குதளம்.