KYNHOOD TECHNOLOGIES நிறுவனம் சார்பில், புதிய சமூக வலைதளமான KYN அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. HYPER-LOCAL முறையில் உருவாகியுள்ள இந்த செயலி, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மாண்புமிகு. Dr. பழனிவேல் தியாகராஜன் இன்று KYN செயலியைத் தொடங்கி வைத்தார். KYN என்பதன் விரிவாக்கம் - Know Your Neighbourhood. இது நமது சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் HYPERLOCAL முறையில் இது ஒன்றிணைக்கும். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் Dr. PTR பழனிவேல் தியாகராஜன், “தொழில்நுட்பம் பல்வேறு நாடுகள், சமூகங்கள் மட்டுமில்லாது தனி நபர்களுக்கும் முன்னேற்றத்தை அளித்துள்ளது. குறிப்பாக கல்வித்துறையில் தொழில்நுட்பம் பல்வேறு பாய்ச்சல்களை நிகழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க | ஆண்ட்ராய்டு மொபைல் வச்சிருக்கீங்களா? அப்போ இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்
ஒருகாலத்தில் படிப்பதற்கே பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்த நிலை மாறி, தற்போது பட்டயக் கல்வியைக் கூட இலவசமாக இணையத்தில் படிக்க முடிகிற நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியான ஒரு சூழலில் KYN App அறிமுகவிழாவில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு சமூக வலைதளம் உள்ளூர் தொழில்முனைவோர், உள்ளூர் திறமையாளர்கள், சமூக குழுக்கள் என ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள வழி அமைத்துக்கொடுக்கும் என்பதை எண்ணும்போதே பெருமையாக இருக்கிறது. இதன் மூலம், ஆரோக்கியமான இணைய சமூகம், இணைய பயன்பாடு நிச்சயம் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. KYN நமது சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உண்டாக்கும். இந்த செயலிக்கும், இதை உருவாக்கியுள்ள குழுவுக்கும் எனது வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டார்.
இந்த KYN செயலியை அறிமுகப்படுத்தி KYNHOOD TECHNOLOGIES நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) காயத்ரி தியாகராஜன் பேசும்போது, “இந்தியாவின் முதல் ஹைப்பர் லோக்கல் சமூக வலைதளமான KYN Appஐ வெளியிடுவதில் எங்களுக்கு பெருமகிழ்ச்சி. KYN - தொலைக்காட்சி, செய்தித்தாள், சமூக வலைதளம் என மூன்றின் கலவையாக இருக்கும். இப்போது சென்னையை முதன்மையாக வைத்து நாங்கள் களம் இறங்கி இருக்கிறோம். இந்த செயலியில் சென்னையை 14 மண்டலங்களாகப் பிரித்து உள்ளோம். KYN மக்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் தளமாக நிச்சயம் இருக்கும். அதுமட்டுமில்லாமல், சிறு, குறு தொழில் முனைவோர், பெண் தொழில்முனைவோர், இல்லத்தரசிகள் தாங்கள் வாழும் பகுதிகளில் தங்களின் பொருட்களை/தயாரிப்புகளைச் சுலபமாக விற்பனை செய்ய ஏதுவாக இருக்கும்.
இதுமட்டுமில்லாமல், பெரிய நிறுவனங்களும் தங்களை சுலபமாக ஹைப்பர் லோக்கல் சந்தையில் விளம்பரப்படுத்த KYN வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும். KYN செயலியில் பயனாளர்களும் தங்களது பதிவுகளை வீடியோ, க்ளிப்ஸ் வடிவங்களில் பதிவிட முடியும். பயனாளர்களுக்குச் சரியான தகவல்களையும், சிறப்பான பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்டதாக KYN நிச்சயம் இருக்கும். தாங்கள் வாழும் பகுதிகளில் நிகழும் நிகழ்வுகளை நேரலையாக காண, படிக்க, தெரிந்துகொள்ள KYN நிச்சயம் உதவியாக இருக்கும்” என்று தெரிவித்தார். இந்த அறிமுக விழாவில், Dani Foundation நிறுவனரும், சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் ஆட்சிக்குழு உறுப்பினருமான திருமதி. வீதா தானி, பிரபல டென்னிஸ் வீரர் திரு.விஜய் அமிர்தராஜ், விஞ்ஞானியும், பத்மபூஷண் விருதாளருமான திரு. நம்பி நாராயணன், நடிகர்கள் மாதவன், சித்தார்த் மற்றும் சமூக வலைதள பிரபலங்கள் பலர் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
KYN Appல் மக்களுக்குத் தேவையான அனைத்துமே கிடைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் வசிக்கும் பகுதியில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளை LIVE முறையில் காணும் வசதி, முக்கியத் தகவல்களை படிக்க Blogs, பயனுள்ள Clips, பொழுதுபோக்கிற்கு Videos என பல்வேறு வடிவங்களின் தகவல் களஞ்சியமாக இருக்கும். உள்ளூர் நிகழ்வுகள் அனைத்தும் தரமாகவும், தகவல்பூர்வமாக கொடுக்கும் தளமாக KYN இருக்கும்.
KYN செயலியின் முக்கிய அம்சங்கள்:
LIVE: பயனாளர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் நடக்கும் முக்கிய விழாக்கள், புதிய அறிமுகங்கள், ஆன்மிக வழிபாடுகள், பொழுதுபோக்கு நிகழ்வுகள், பள்ளி - கல்லூரி கலை, விளையாட்டு விழாக்களை KYN செயலியில் நேரலையாகக் காண முடியும்.
UGC: பயனாளர்கள் தங்களுடைய வீடியோக்களை KYN செயலியில் உருவாக்கவும், பதிவிடவும் முடியும். இதன் மூலம் தங்களுடைய திறமைகள், பாடல், இசை, எழுத்து என தங்களுக்கு ஆர்வமான அனைத்தையும் முயற்சிக்க முடியும். இவை அனைத்தும் உங்களை உங்கள் பகுதியின் குரலாக, முகமாக, நட்சத்திரமாக மாற்றும்.
Marketplace: உள்ளூரின் தொழில்முனைவோர், வீட்டில் இருந்தே சிறு தொழில் செய்வோர் என பலருக்கும் தங்களை சந்தைப்படுத்திக்கொள்ள KYN வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும். இதன் மூலம் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளவும், தங்கள் பொருட்களை அறிமுகப்படுத்தவும் பலருக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
மேலும் படிக்க | OpenAI Sora வீடியோக்களை எப்படி உருவாக்குகிறது? நீங்கள் பயன்படுத்துவது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ