விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள இஸ்ரோவுக்கு உதவும் NASA...

சந்திரயான் 2 விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள இஸ்ரோவுக்கு நாசா உதவுகிறது!!

Last Updated : Sep 13, 2019, 03:36 PM IST
விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள இஸ்ரோவுக்கு உதவும் NASA...  title=

சந்திரயான் 2 விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள இஸ்ரோவுக்கு நாசா உதவுகிறது!!

நிலவின் தென்பகுதியில் சந்திரயான் விண்கலனை தரை இறக்கி உலக சாதனை நிகழ்த்தவிருந்தது இந்தியா. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து ஜூலை 22 ஆம் தேதி GSLV மார்க் 3 ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் சரியான பாதையில் விண்ணில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது. கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலை சந்திரயான் 2 விண்கலம் நிலவில் தரையிறங்குவதாக இருந்தது.

ஆனால், நிலவிலிருந்து 2.1 KM தொலையில் விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் சந்திரயான் 2 விண்கலத்தை நிலவில் நிலை நிறுத்தும் இஸ்ரோவின் திட்டம் பின்னடைவைச் சந்தித்தது. ஆனாலும்,  தங்களின் முயற்சியை கைவிடாமல் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ளும் முயற்சியில் இஸ்ரோவுடன் நாசாவும் கைகோர்த்துள்ளது. இஸ்ரோ சார்பில் லேண்டருடன் தொடர்பு கொள்ளும் முயற்சி பெங்களூரு அருகே உள்ள Byalaluவில் இருக்கும் Indian Deep Space Networkல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தனது Jet Propulsion ஆய்வகத்தில் இருந்து விக்ரம் லேண்டருக்கு ரேடியோ சிக்னல்களை அனுப்பி வருகிறது. வரும் 21 ஆம் தேதி வரை விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதியில் சூரிய வெளிச்சம் இருக்கும் என்றும், அதுவரை லேண்டருடன் தொடர்ப்பு கொள்ளும் முயற்சி நடைபெறும் என்றும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவை சுற்றி வரும் நாசாவின் ஆர்பிட்டர், வரும் 17ஆம் தேதி விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதிக்கு மேல் சுற்றி, லேண்டரை புகைப்படம் எடுத்து இஸ்ரோவுக்கு அனுப்ப உள்ளதாகவும், அதனை கொண்டு ஆய்வுகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

சந்திரயான்-2 நிலவில் இறங்கியிருந்தால் நிலவின் ஒரு பகல் பொழுது (Lunar Day) மட்டுமே அங்கு ஆராய்ச்சி செய்திருக்கும். அதாவது 14 நாள்கள், அதன்படி வரும் செப்டம்பர் 20, 21 ஆம் தேதியோடு நிலவின் ஒரு பகல் பொழுது முடிகிறது. அதற்குள் விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களின் முயற்சிக்கு உதவும் வகையில் நாசாவும் இணைந்துள்ளது. 

 

Trending News