வீடியோ ஸ்ட்ரீமிங் சேவை வழங்கும் நிறுவனமான நெட்ஃபிக்ஸ் 2 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களை இழந்ததால், அதன் பங்கு விலைகள் சரிந்து பெரும் இழப்பை சந்துள்ள நிலையில், சந்தாதாரர்களை அதிகரிக்கவும், மீண்டு வருவதற்கும், திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது.
நெட்ஃபிக்ஸ் அறிவிக்கும் இந்த திட்டம் சந்தாதாரர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடியது என்றால் மிகையில்லை. குடும்பத்தினர் அல்லாதவர்களுடன் கணக்குகளைப் பகிரும் பயனர்களுக்கு அதிக கட்டணம் விதிக்கப்படும் என்று நெட்ஃபிக்ஸ் கூறியுள்ளது. TechCrunch வெளியிட்டுள்ள தகவலில், நெட்ஃபிக்ஸ் நிறுவனம் மார்ச் மாதத்தில் சிலி, கோஸ்டாரிகா மற்றும் பெருவில் இந்த திட்டத்தை தொடங்கியது. இப்போது அடுத்த ஒரு வருடத்திற்குள் உலகளவில் அதை வெளியிட திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்க | Netflix பங்குகள் கடும் சரிவு; 2 லட்சம் சந்தாதாரர்களை இழந்த நெட்பிளிக்ஸ்
இந்த அம்சத்தை சோதிக்க ஒரு வருட கால ஆகலாம் என்றும், பின்னர் தங்கள் குடும்பத்திற்கு வெளியே உள்ளவர்களுடன் கணக்குகளைப் பகிரும் பயனர்களுக்கு என்ன கட்டணம் விதிக்க வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் Netflix கூறியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுவனம் இந்த திசையில் செயல்பட்டு வருவதாக நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரி கிரெக் பீட்டர்ஸ் தெரிவித்தார்.
Netflix சில இடங்களில் உள்ள பயனர்களின் ஸ்டாண்டர்ட் மற்றும் பிரீமியம் சந்தாக்களுடன் துணைக் கணக்குகளைச் சேர்க்க அனுமதிக்கிறது. இந்தக் கணக்கு அனைத்தும் சந்தாதாரருடன் வசிக்காதவர்களுக்கானதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு துணைக் கணக்கிற்கும் அதற்கான தனி சுயவிவரம் மற்றும் பரிந்துரை போன்றவை இருக்கும். இது ஜிபிஎஸ் அடிப்படையிலானதாக இருக்காது. இது ஐபி முகவரி, சாதன ஐடி போன்றவற்றைப் பயன்படுத்தும், மேலும் பயனர்கள் தங்கள் கணக்கை வீட்டிற்கு வெளியே உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்களா இல்லையா என்பதை இதிலிருந்து அறியலாம்.
மேலும் படிக்க | Tips and Tricks: நெட்ஃபிளிக்ஸ் சந்தாவை எளிதாக ரத்து செய்யும் சுலப வழிமுறைகள்
மேலும் படிக்க | Jio - Vi - Airtel: ₹299 பிரீபெய்ட் திட்டத்தில் சிறந்தது எது?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR