Smartphones: 2022-ல் கலக்க வரும் பெஸ்ட் 5 ஸ்மார்ட்போன்கள்

புத்தாண்டு நெருங்கிவிட்டதால், அடுத்த ஆண்டு வெளியாகும் ஸ்மார்ட்போன்கள், கார்கள் மற்றும் டுவீலர்கள் குறித்து மக்கள் இப்போதே தேடத் தொடங்கவிட்டனர். அந்தவகையில், ஸ்மார்ட்போன் சந்தையில் அடுத்த ஆண்டு கலக்க வரும் 5 ஸ்மார்ட்போன்களைப் பார்க்கலாம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 23, 2021, 05:26 PM IST
Smartphones: 2022-ல் கலக்க வரும் பெஸ்ட் 5 ஸ்மார்ட்போன்கள் title=

2021 ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மிகவும் கடினமான காலமாகவே இருந்தன. கொரோனா வைரஸ் பரவல், பல்வேறு நாடுகளில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக சிப்செட்டுகள் தயாரிப்பு, விநியோகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சுணக்கமே நிலவியது. இந்த ஆண்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும், ஸ்மார்ட்போன் மார்க்கெட்டை ஆக்கிரமிக்கவும் நிறுவனங்கள் இப்போதே தயாராகிவிட்டன. அதனால், அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள பெஸ்ட் 5 ஸ்மார்ட்போன்களின் ஃபியூச்சர்ஸை தெரிந்து கொள்ளலாம்.

OnePlus 10 Pro

OnePlus 10 Pro ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus 9 போலல்லாமல், இந்த ஸ்மார்ட்போன் ஜனவரியிலேயே அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. OnePlus 10 Pro ஜனவரி 5 ஆம் தேதி வெளியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் LTPO OLED பேனலைக் கொண்டிருக்கும். வழக்கமான OLED டிஸ்ப்ளேக்களைவிட இந்த பேனல் 1GHz முதல் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் இருக்கும். பின்பக்கத்தில் இருக்கும் முதன்மை கேமரா 48 மெகாபிக்சல் மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ், 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 8 மெகாபிக்சல் சென்சாருடன் இருக்கும். செல்பி கேமரா 32 மெகாபிக்சலுடன் இருக்கும்.

ALSO READ | Budget Mobile: ரூ.10,000-க்கு குறைவான விலையில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள்..!

Realme GT 2 Pro

இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 4 ஆம் தேதி உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ​Realme GT 2 Pro  மொபைலானது பயோ-பாலிமர் மெட்டீரியலில் தயாரிக்கப்பட்டுள்ளது. 150 டிகிரி அல்ட்ராவைட் கேமரா இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மொபைல் 2015 இல் அறிமுகப்படுத்தப்பட்ட Nexus 6P போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும் எனவும், Snapdragon 8 Gen 1 சிப்செட், 120Hz (Refresh) புதுப்பிப்புடன் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே இடம்பெறும். 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளிட்ட மூன்று பின்புற கேமராக்கள் Realme GT 2 Pro-வில் இருக்கும். முன்பக்க கேமரா 32 மெகாபிக்சல் சென்சாருடன் வரும்.

Samsung Galaxy S22 Ultra

Samsung Galaxy S22 Ultra முதல் காலாண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் Snapdragon 8 Gen 1 சிப்செட் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. S21 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் உள்ள அதே கேமரா அமைப்புடன் வடிவமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், புகைப்படங்கள் அதைவிட மேம்பட்ட தரத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Xiaomi 11i ஹைப்பர்சார்ஜ்

Xiaomi நிறுவனம், Xiaomi 11i ஹைப்பர்சார்ஜ் ஸ்மார்ட்போனை அடுத்த ஆண்டு வெளியிடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த போனின் பெஸ்ட் என்னவென்றால், வேகமான சார்ஜிங் மற்றும் கேமரா தான். 120W வேகமான சார்ஜிங் அம்சத்தைக் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என தெரிவித்துள்ள அந்நிறுவனம், 5ஜி வசதியுடன் வெளிவர உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு (Refresh) வீதத்துடன் 6.67-இன்ச் AMOLED பேனலைக் கொண்டிருக்கலாம். 108 மெகாபிக்சல்களுடன் மூன்று பின்புற கேமராக்கள் இருக்கும். 4500mAh பேட்டரி இருக்கும். அனுப்பப்படலாம்.

ALSO READ | Amazon Bumper Offer; வெறும் 5 ஆயிருக்கு Vivoவின் 5G ஸ்மார்ட்போன்

Pixel 6a

மேற்கூறிய ஸ்மார்ட்போன்கள் முதல் 3 மாதங்களுக்குள்ளாக அறிமுகப்படுத்தபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் பிக்சல் 6ஏ அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மிட்ரேஞ்ச் வெரைட்டியில் தயாரிக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன்கள், அதிகபட்சம் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.2-இன்ச் OLED பேனலுடன் வெளியாக வாய்ப்புள்ளது. கேமராவைப் பொறுத்தவரை பிக்சல் 5 போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News