மார்க்கெட்டில் எப்போதும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு வரவேற்பு இருக்கும். ஆண்டு இறுதி என்பதால், சில சலுகைகளோடு மலிவான ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பட்ஜெட் ஸ்மார்ட்போனில் 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், எப்போதும் அவற்றின் சிப்செட், பேட்டரி, ரேம் மற்றும் ஸ்டோரேஜ், சாப்ட்வேர் குறித்து தெரிந்து தேர்ந்தெடுப்பது அவசியம். இந்த வெரைட்டியில் நிறைய ஸ்மார்ட்போன்கள் இருந்தாலும், சிறந்த தேர்வுகளை உங்களுக்கு கொடுக்க முயற்சி செய்துள்ளோம்.
Infinix Hot 10S
10 ஆயிரம் ரூபாய்க்குள் சிறந்த செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களை தேடுகிறீர்கள் என்றால், Infinix Hot 10S -ஐ தேர்ந்தெடுக்கலாம். ஏனென்றால், மீடியாடெக் ஹீலியோ G85 பிரிவில் உள்ள வேகமான சிப்செட்களை கொண்ட ஸ்மார்ட்போன். 90Hz HD+ டிஸ்ப்ளே, 6,000 mAh பேட்டரி மற்றும் 48 MP டிரிபிள்-கேமரா அமைப்பு ஆகியவை உள்ளன. 4 ஜிபி ரேமுடன் 64 ஜிபி வரை சேமித்துக்கொள்ளலாம். இதன் விலை ரூ.9,999.
ALSO READ | Smartphones: 2022-ல் கலக்க வரும் பெஸ்ட் 5 ஸ்மார்ட்போன்கள்
Realme Narzo 30A
Infinix Hot 10S ஸ்மார்ட்போனைப் போலவே Realme Narzo 30A-வும் வேகமான MediaTek Helio G85 SoC உடன் கூடிய ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 8,999 ரூபாய் என்றாலும், 4 ஜிபி ரேமுடன் 64 ஜிபி ஸ்டோரேஜூடன் வாங்கினால் 9,999 ரூபாய் வரும். மேலும், HD+ டிஸ்ப்ளே, 18W பாஸ்ட் சார்ஜிங்குடன் கூடிய 6,000 mAh பேட்டரி இருக்கும். 13 MP டூயல் பேக் கேமராவும் உள்ளது.
Tecno Spark 7T
டெக்னோ ஸ்பார்க் 7டி என்பது சப்-10கே ஸ்மார்ட்போனின் மற்றொரு சாய்ஸ் என்றுக்கூட சொல்லலாம். 4 ஜிபி ரேமுடன் 64 ஸ்டோரேஜ் வசதியுடன் இருக்கும். பேட்டரி 6,000 mAh கொண்டிருக்கும். HD+ IPS பேனல், MediaTek Helio G35 SoC மற்றும் 48 MP டூயல் கேமரா செட்டிங்ஸூடன் இருக்கும்.
Moto G10 Power
நல்ல ஹார்வேருடன் ஸ்மார்ட்போன் வாங்க விரும்புபவர்களுக்கு, பட்ஜெட் விலையில் கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த தேர்வு Moto G10 Power. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய் விலையில் கிடைக்கும். ஃபோனில் ஸ்னாப்டிராகன் 460 சிப்செட், 48 எம்பி குவாட் கேமரா அமைப்பு, இதில் 8 எம்பி அல்ட்ராவைடு ஷூட்டர், 20W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய பாரிய 6,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் எச்டி+ ஐபிஎஸ் டிஸ்ப்ளே ஆகியவை உள்ளன. பட்ஜெட் போன்களிலேயே மிகச்சிறந்தது என்று கூட சொல்லலாம்.
ALSO READ | ஜனவரியில் வருகிறது OnePlus 10 Pro! என்னென்ன சிறப்பம்சங்கள்?
மைக்ரோமேக்ஸ் இன் 1
9,999 ரூபாய் விலையில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ரேமுடன் கிடைக்கக்கூடிய மற்றொரு சிறந்த சாயஸ் மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன். மோட்டோ ஜி10 பவருக்கு சிறந்த போட்டியான இந்த ஸ்மார்ட்போன், MediaTek Helio G80 SoC, 48 MP டிரிபிள் கேமரா அமைப்பு மற்றும் 18W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5,000 mAh பேட்டரியை கொண்டிருக்கும். இதுவரை கூறப்பட்ட ஸ்மார்ட்போன்களிலேயே மைக்ரோமேக்ஸ் இன் 1 மட்டுமே FHD+ IPS டிஸ்ப்ளே கொண்ட ஒரே ஸ்மார்ட்போன்.
இவைதவிர, லாவா Z6, Redmi 9i, Realme C25, Moto E40 ஸ்மார்ட்போன்களும் 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான விலையில் கிடைக்கின்றன.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR