Diwali Festival Offers: டிவி வாங்கினால் ஸ்மார்ட்ஃபோன் இலவசம்..50% தள்ளுபடி கொடுக்கும் சாம்சங்

தீபாவளியையொட்டி பிரம்மாண்ட சலுகைகளை வழங்கும் சாம்சங் நிறுவனம், டிவி வாங்கினால் கேலக்ஸி ஸ்மார்ட்போனை இலவசமாக கொடுக்கிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 29, 2022, 07:22 AM IST
  • ஸ்மார்ட் டிவி வாங்கினால் போன் இலவசம்
  • சாம்சங் நிறுவனத்தின் அதிரடி விற்பனை சலுகை
 Diwali Festival Offers: டிவி வாங்கினால் ஸ்மார்ட்ஃபோன் இலவசம்..50% தள்ளுபடி கொடுக்கும் சாம்சங் title=

Samsung Diwali Offers: பண்டிகை காலம் களைகட்ட தொடங்கியிருப்பதால் முன்னணி நிறுவனங்கள் ஆஃபர்களை அள்ளி வீசத் தொடங்கியிருக்கின்றன. ஏதேனும் பொருட்களை வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால் இதுவே சரியான நேரம். 50 விழுக்காட்டுக்கும் அதிகமான தள்ளுபடியில், அதாவது பாதி விலையில் பொருட்களை அள்ளலாம்.  

சாம்சங் இந்தியா ஆஃபர்

பிளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் வர்த்தக தளங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல வகையான சலுகைகளை வழங்கி வருகின்றன. இப்போது சாம்சங் இந்தியா தனது No Mo’ FOMO Sale' விற்பனையைத் தொடங்கியுள்ளது. ஆன்லைனில் விற்பனையில், அனைத்து வகையான வீட்டு உபயோகப் பொருட்கள், தொழில்நுட்ப பாகங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள்-டிவிகள் ஆகியவற்றில் சிறப்பான சலுகைகளை சாம்சங் வழங்குகிறது. மலிவு விலையில் நல்ல தரமான போனை வாங்க நினைத்தால், இந்த விற்பனையில் சாம்சங் போனை வாங்கலாம். கேலக்ஸி எம், எஸ் மற்றும் இசட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு 57 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | Flipkart vs Amazon: தொடங்கிவிட்டது அசத்தல் விற்பனை, iPhone 14 வாங்க சிறந்த இடம் எது

500 ரூபாயில் 6 ஆயிரம் ரூபாய் சார்ஜர்

இந்த விற்பனையில் கேலக்ஸி இசட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வாங்கும்போது, ​​ரூ.5199-க்கு வரும் வயர்லெஸ் சார்ஜர் டியோவை ரூ.499க்கு வாங்க முடியும். அதே நேரத்தில், கேலக்ஸி எஸ் சீரிஸ் மற்றும் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வாங்கும்போது ஃபோன் கவரில் 50% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. கேலக்ஸி எஃப் சீரிஸ் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.10,999 ஆக வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ரூ.10,499 முதல் தொடங்குகின்றன. இந்த ஆன்லைன் விற்பனையில், Galaxy S20 FE 5G ஸ்மார்ட்போன் முதல் முறையாக ரூ.26,999 என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. நீங்கள் விரும்பினால், EMI-யிலும் வாங்கலாம்.

டிவி வாங்கினால் ஸ்மார்ட்போன் இலவசம்

ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, சாம்சங்கின் எல்இடி டிவியை வாங்கினால் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போன் இலவசமாக கிடைக்கும். நீங்கள் சாம்சங் வாஷிங் மெஷின் வாங்கினால், உங்களுக்கு மைக்ரோவேவ் ஓவன் நிறுவனம் இலவசமாக வழங்கப்படும். UHD ஸ்மார்ட் டிவிகளில் நிறுவனம் நல்ல சலுகைகளை வழங்குகிறது. நீங்கள் Crystal 4K UHD Smart TV AUE60-ஐ 45% தள்ளுபடியுடன் வாங்கலாம்.

மேலும் படிக்க | Amazon, Flipkart சலுகை விற்பனையில் 80-85% தள்ளுபடி எப்படி சாத்தியமாகிறது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News