இனி ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோரில் “ஐபோன் எக்ஸ்” கிடைக்கும்

இன்று 8 மணி முதல் ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோரில் "ஐபோன் எக்ஸ்" விற்பனை செய்யப்படுகிறது.

Last Updated : Nov 17, 2017, 08:03 PM IST
இனி ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோரில் “ஐபோன் எக்ஸ்” கிடைக்கும் title=

இன்று பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது ஆன்லைன் ஸ்டோரில் "சூப்பர் பிரீமியம்" ஆப்பரில் புதிய ஆப்பிள் "ஐபோன் எக்ஸ்" போனை அறிமுகப்படுத்தி உள்ளது.

இன்று 8 மணி முதல் ஐபோன் எக்ஸ் போன்கள் ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோரில் விற்பனை செய்யப்படுகிறது. அதன் விலை 64GB ஐபோன் எக்ஸ் ரூ 89,000,  256 ஜிபி ஐபோன் எக்ஸ் ரூ 102,000 கிடைக்கும்.

ஏற்கனவே ஏர்டெல் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோரில் "ஐபோன் எக்ஸ்" விற்பனைக்கு வந்த போது சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது என ஏர்டெல் நிறுவனம் அறிவித்திருந்தது.

ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோரில் மொபைல் போன் வாங்குவோருக்கு, இலவச டெலிவரி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News