மக்களின் நலன் கருதி "பாஸ்போர்ட் சேவா" செயலி அறிமுகம் செய்துள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்!!
ஒருவர் வெளிநாடுகளுக்கு செல்ல விருப்ப பட்டால் நமக்கு முக்கியமான ஒன்று பாஸ்போர்ட் தான். பாஸ்போர்ட் பெறுவது மட்டும் எளிமையா என்ன. பாஸ்போர்ட் நிறுவனத்துக்கு சென்று அவர்கள் கேட்கும் அனைத்து தகவல்களையும் கொடுத்த பின்னர் அவர்கள் கூறுவார்கள் சரி இனி அருகில் உள்ள காவல்துறையிலிருந்து உங்கள் முகவரி மற்றும் அனைத்து தகவல்களும் சரிசெய்த பின்னர் 15 நாட்களில் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறுவார்கள். சிலருக்கு அதுபோன்று கிடைக்கும் சிலருக்கு குறிப்பிட்ட காலத்தில் கிடைக்காது.
இனி அந்த கவலையும் அலைச்சர்லும் உங்களுக்கு சுத்தமாக வேண்டாம். நாம் இனி உட்காந்த இடத்திலிருந்து பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்கலாம். நாட்டின் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே கைபேசி மூலம் விண்ணப்பிக்கும் "பாஸ்போர்ட் சேவா" செயலியை அறிமுகபடுத்தியிள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
அதில், நீங்கள் குறிப்பிடும் முகவரியில் போலீஸ் துறையின் சரிபார்ப்பு முடிந்த பின்னர் தபால் மூலம் பாஸ்போர்ட் அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த புதிய முறையின் மூலம் பாஸ்போர்ட் பெறும் நடைமுறைகள் மிக துரிதமாகவும், சுலபமாகவும் முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
Now, through Passport Seva app, people can apply for a passport from any part of the country. Police verification will be done on the address you will give on the app. The passport will be dispatched to that address: EAM Sushma Swaraj pic.twitter.com/rdYdq6sRsb
— ANI (@ANI) June 26, 2018
மேலும் அவர் கூறுகையில், திருமணமான பெண்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க திருமண சான்றிதழ் தேவையில்லை எனவும் விவாகரத்து பெற்ற பெண்கள் முன்னாள் கணவர் பெயரை குறிப்பிட வேண்டிய அவசியமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.