Simple One Electric Scooter: சிம்பிள் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் சிம்பிள் ஒன் மின்சார பைக்கை அறிமுகம் செய்துள்ளது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் S1 மற்றும் S1 ப்ரோ மற்றும் ஏத்தர் 450x போன்ற மற்ற மின்சார பைக்குகளுக்கு இது சரியான போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஓலா எலக்ட்ரிக் மற்றும் சிம்பிள் எனர்ஜி ஆகிய இரு மின்சார ஸ்கூட்டர்களும் ஆகஸ்ட் 15, நாட்டின் 75 வது சுதந்திர தினத்தன்று அறிமுகம் செய்யப்பட்டன. ஓலா எலக்ட்ரிக் தனது மின்சார ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவை சில வாரங்களுக்கு முன்னர் துவக்கியது. ஓலா ஸ்கூட்டருக்கு வாடிக்கையளர்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. ஓலாவின் மின்சார உற்பத்தி பிரிவு தனது வாடிக்கையாளர்களிடமிருந்து முன்பதிவு கட்டணமாக ரூ .499-ஐ மட்டுமே வசூலிக்கிறது.
ஓலா தனது முதல் மின்சார ஸ்கூட்டர் தொடரான ஓலா எஸ் 1 சீரிசை 15 ஆகஸ்ட் 2021 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஓலா மின்சார ஸ்கூட்டர், ஓலா எஸ் 1 மற்றும் ஓலா எஸ் 1 ப்ரோ என்ற இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
சிம்பிள் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் சிம்பிள் ஒன் மின்சார பைக்கை அறிமுகம் செய்துள்ளது, ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் S1 மற்றும் S1 ப்ரோ மற்றும் ஏத்தர் 450x போன்ற மற்ற மின்சார பைக்குகளுக்கு இது சரியான போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒரு புறம், தனது எஸ் 1 மின்சார ஸ்கூட்டர் மூலம் பெரிய அளவிலான பரபரப்பை ஓலா ஏற்படுத்தியது. மறுபுறம், சிம்பிள் எனர்ஜி ஸ்கூட்டர் ஒரு சார்ஜில் 236 கிமீ தூர பயணம் என்ற அசாத்திய வரம்பை அளிக்கின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.