’சீக்கிரம் லட்சாதிபதியாகலாம்’ சாட்ஜிபிடி கொடுக்கும் ரூ.16 லட்சம் - விட்டறாதீங்க..!

சாட்ஜிபிடி மூலம் பலரும் பல்வேறு வழிகளில் சாம்பாதித்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்நிறுவனமே லட்சகணக்கான ரூபாயை வெகுமதியாக அறிவித்துள்ளது. இதனை எப்படி பெறலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 16, 2023, 01:00 PM IST
’சீக்கிரம் லட்சாதிபதியாகலாம்’ சாட்ஜிபிடி கொடுக்கும் ரூ.16 லட்சம் - விட்டறாதீங்க..! title=

சாட்ஜிபிடி 

அமெரிக்காவின் ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகப்படுத்திய சாட்ஜிபிடி இணைய உலகை ஆக்கிரமித்துள்ளது. எந்த வேலையை எடுத்தாலும் கண்ணிமைக்கும் நேரத்தில் முடித்துக் கொடுக்கும் சாட்ஜிபிடி மூலம் பல வழிகளில் சம்பாதிக்கலாம். இந்த தொழில்நுட்பத்தை ஸ்மார்ட்டாக பயன்படுத்தினால் வெப்சைட் வைத்திருப்பவர்கள், யூடியூப் சேனல் வைத்திருப்பவர்கள் எல்லாம் கோடிகளில் வெகு சீக்கிரமே புரண்டுவிட முடியும். ஆனால் அதற்கு உங்களின் முயற்சி அவசியம். இது ஒருபுறம் இருக்க, சாட்ஜிபிடி நிறுவனமே இப்போது பணப் பரிசை அறிவித்துள்ளது. சும்மா... ஆயிரம்.... 10 ஆயிரம் ரூபாய் பரிசு எல்லாம் அல்ல அது.

மேலும் படிக்க | Cheapest Electric Cars: இவைதான் இந்தியாவின் மிக மலிவான எலக்ட்ரிக் கார்கள்

ஓபன்ஏஐ வெகுமதி 

16 லட்சம் ரூபாயை கொத்தாக கொடுக்கிறது. இதற்கு நீங்கள் கொஞ்சம் மூளையை கசக்கிப் பிழிய வேண்டும். டெக் துறையில் உங்களுக்கு அனுபவம் இருந்தால், இந்த பரிசு நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு பிரகாசம் எனலாம். சாட்ஜிபிடிக்கு சொந்தமான OpenAI நிறுவனம் இப்போது Bug Bounty என்ற புதிய திட்டத்தை தொடங்கியிருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் இந்த திட்டத்தில், சாட்ஜிபிடியில் இருக்கும் புகார்களை கண்டறிந்து கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானமான 16 லட்சம் ரூபாய் கொடுக்கப்படும்.

சிறிய பிழைகளுக்கும் பரிசு 

சின்ன சின்ன பிழைகளை சொல்பவர்களுக்கும் கூட பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த பிழைகளுக்கு 200 அமெரிக்க டாலர் தொகை கிடைக்கும் என ஓபன்ஏஐ நிறுவனம் அறிவித்துள்ளது. ஓபன்ஏஐ நிறுவனத்தின் படைப்பான சாட்ஜிபிடியை மேம்படுத்த வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதால், வெளிப்படையாக இப்படி அறிவித்துள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது. ஆனால், இந்த திட்டம் ஒன்றும் புதிதல்ல. பெரிய டெக் நிறுவனங்கள் அனைத்துமே இப்படியான முறைகளை கையாண்டு வருகின்றன. கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் கூட தங்களின் தயாரிப்புகளில் இருக்கும் தவறுகளை சுட்டிக் காட்டுபவர்களுக்கு இப்படியான வெகுமதியை அளித்து வருகிறது.

மேலும் படிக்க | ட்விட்டர் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News