தமிழகத்தில் 5 இடங்களில் பெட்ரோலிய எண்ணெய் மண்டலம்: மத்திய அரசு தகவல்!

தமிழகத்தில் 5 இடங்களில் பெட்ரோலிய எண்ணெய் மண்டலம் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அரசின் தகவல் வெளியாகியது.  

Last Updated : Mar 5, 2018, 05:39 PM IST
தமிழகத்தில் 5 இடங்களில் பெட்ரோலிய எண்ணெய் மண்டலம்: மத்திய அரசு தகவல்! title=

தமிழகத்தில் 5 இடங்களில் பெட்ரோலிய எண்ணெய் மண்டலம் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அரசின் தகவல் வெளியாகியது.

சென்னை அருகே வல்லூர் உள்ளிட்ட தமிழகத்தின் எண்ணூர், ஆசனூர், தருமபுரி, நெல்லை, சென்னை ஆகிய 5 இடங்களில் பெட்ரோலிய எண்ணெய் மண்டலங்கள் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் தகவல் வெளியாகியது.

இது தொடர்பாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி இருப்பதாவது:-

இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவது தொடர்பாக மக்களிடம் கெயில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. தமிழக அரசு அமைத்த வல்லுநர் குழுவுடன் மத்திய அரசு 5 முறை ஆலோசனை நடத்தியுள்ளது.

பெட்ரோலிய எண்ணெய் மண்டலங்கள் அமைக்க முதற்கட்டமாக மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகங்களின் அனுமதி பெற வேண்டியுள்ளது. மேலும் சில கமிட்டிகளின் அனுமதியும் பெறவேண்டும். இது இறுதியான முடிவு அல்ல பரிந்துரை மட்டுமே என்று கூறப்படுகிறது

நாகை, திருவாரூரில் ஏற்கனவே பெட்ரோலிய எண்ணெய் மண்டலங்கள் உள்ள நிலையில் மேலும் 5 பெட்ரோலிய மண்டலங்கள் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Trending News