அட்டகாசமான விலையில் Poco X4 Pro 5G - நாளை அறிமுகம்

போகோ நிறுவனத்தின் புதிய 5 ஜி ஸ்மார்ட்போன் அட்டகாசமான விலையில் நாளை அறிமுகமாகிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 27, 2022, 04:36 PM IST
  • நாளை அறிமுகமாகும் போகோ 5ஜி ஸ்மார்ட்போன்
  • ரெட்மி போனுக்கு போட்டியாக களமிறங்குகிறது
  • விலை மற்றும் அசத்தல் அம்சங்களின் முழு விவரம்
அட்டகாசமான விலையில் Poco X4 Pro 5G - நாளை அறிமுகம்  title=

Poco X4 Pro 5G ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகாரப்பூர்வ தேதி வெளியாகியுள்ளது. அதன்படி, மார்ச் 28 ஆம் தேதி போகோ நிறுவனத்தின் 5 ஜி ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த 5 ஜி ஸ்மார்ட்போன்  67W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட Redmi Note 11 Pro + 5G ஸ்மார்ட்போனிலும் இந்த அம்சம் இருந்தது. 

மேலும் படிக்க | புதிய சோஷியல் மீடியா தளத்தை தொடங்குகிறாரா எலான் மஸ்க்? அவரே கூறிய பதில்

67W Sonic Charge தொழில்நுட்பத்தின் மூலம் Pocoவின் புதிய போனை 15 நிமிடங்களில் 50 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும். 5,000 mAh பேட்டரி இடம் பெற வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேட்டரி அதிக நாட்களுக்கு லைப் கொடுக்கும் உறுதியாகியுள்ளது. இதேபோல், நாள் முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு நாள் பயன்பாட்டுக்கு முழுமையாக ஒத்துழைக்கும். 

இதில் இடம்பெற்றிருக்கும் அம்சங்களை பொறுத்தவரை Redmi Note 11 Pro5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை அப்படியே கொண்டுள்ளது. இரண்டு போன்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் கேமராவாக இருக்கலாம். ரெட்மி போனில் 108எம்பி பிரைமரி கேமரா கொடுக்கப்பட்டுள்ள நிலையில், போகோ எக்ஸ்4 ப்ரோ 5ஜியில் 64எம்பி பிரைமரி கேமரா இருக்கலாம். ரேம் மற்றும் செயலியைப் பொறுத்தவரை Poco X4 Pro 5G ஆனது Qualcomm Snapdragon 695 செயலி மூலம் 8GB வரை ரேம் மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டதாக இருக்கும். ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான MIUI 13-ல் வேலை செய்யும்.

மேலும் படிக்க | ஐபிஎல் முன்னிட்டு ஒரு வருடத்திற்கு ஹாட்ஸ்டார் சந்தா இலவசம்

விலை

Poco 5ஜி ஸ்மார்ட்போனின் விலை Remi Note 11 Pro+ஐ விட சற்று மலிவாக இருக்கும். ஏனென்றால் Redmi Note 11 Pro +5G-ன் விலை 20,999 ரூபாயாகும்.  அந்த விலையுடன் ஒப்பிடுகையில் Poco X4Pro5G-ன் விலை 20 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News