நோக்கியாவின் புதிய 4G போன்; விலை 2999 ரூபாய் மட்டும்!

நோக்கியா நிறுவனத்தில் பிரசித்திப்பெற்ற போன்களை மறு சந்தையிடும் திட்டத்தின் கீழ் புதிய வடிவம், அம்சங்களுடன் மீண்டும் அறிமுகம் செய்து வருகிறது. 

Updated: Jul 25, 2019, 02:59 PM IST
நோக்கியாவின் புதிய 4G போன்; விலை 2999 ரூபாய் மட்டும்!

நோக்கியா நிறுவனத்தில் பிரசித்திப்பெற்ற போன்களை மறு சந்தையிடும் திட்டத்தின் கீழ் புதிய வடிவம், அம்சங்களுடன் மீண்டும் அறிமுகம் செய்து வருகிறது. 

அந்த வகையில் தற்போது நோக்கியாவின் பழைய போன்களான நோக்கியா 105, நோக்கியா 220 போன்கள் மீண்டும் சந்தையில் அறிமுகம் செய்ய நோக்கியா திட்டமிட்டுள்ளது. இதில் நோக்கியா 220, 4ஜி அம்சத்துடன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு போன்களும் அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் என எச்.எம்.டி க்ளோபல் நிறுவனம் அதிகாரபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.

நோக்கியா 105 போனை பொறுத்தவரையில் 3 வகை வண்ணங்களில் கிடைக்கும். நோக்கியா சீரிஸ் 30+ மென்பொருள் மூலம் இந்த போன் இயங்கும். 

1.45 இன்ச் டி.எப்.டி ஸ்க்ரீன், 128x128 பிக்சல் ரெசலுயூஷன், நோக்கியா சீரிஸ் 30 மென்பொருள், 35 நாட்கள் நீடிக்கும் திறன் கொண்ட 800 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளிட்ட வசதிகளை இந்த நோக்கியா 105 பெற்றிருக்கும். 

முற்றிலும் புதிய டிசைனில் வெளிவரும் நோக்கியா 220 4ஜி போன் விலை ரூ.2999 இருக்கலாம் என கூறப்படுகிறது.

நோக்கியா 220, 2014-ஆம் ஆண்டு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அந்த போன் 4ஜி சப்போர்ட் உடன் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுளது. 4ஜி சப்போர்ட் தவிர இந்த போனில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

நீலம், பிங்க் மற்றும் கருப்பு நிறங்களில் வெளிவரும் நோக்கியா 105, ரூ 1000-க்கு விற்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆகஸ்ட் நடுவாக்கிலிருந்து இந்த போன் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.