Realme 10: புதுசா போன் வாங்க போறவங்க பக்காவாக வெளியாகும் Realme 10 சீரிஸூக்கு காத்திருக்கலாம்

Realme 10 Pro+ 5G; புதியதாக போன் வாங்க பிளான் பண்ணியிருக்கிறீர்கள் என்றால், ரியல் மீ நிறுவனத்தின் 10 சீரிஸில் வெளியாகும் போனுக்கு நீங்கள் கொஞ்சம் வெயிட் பண்ணலாம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 4, 2022, 02:09 PM IST
  • ரியல் மீ 10 சீரீஸ் இந்தியாவில் விரைவில் அறிமுகம்
  • விலை உள்ளிட்ட முழு விவரங்கள் தகவல் வெளியாகியுள்ளது
  • புதுசா போன் வாங்க போறவங்க கொஞ்சம் வெயிட் பண்ணலாம்
 Realme 10: புதுசா போன் வாங்க போறவங்க பக்காவாக வெளியாகும் Realme 10 சீரிஸூக்கு காத்திருக்கலாம் title=

Realme: Realme நிறுவனம் விரைவில் Realme 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியா, சீனா ஐரோப்பா மற்றும் பிற ஆசிய நாடுகள் உட்பட பல்வேறு ஸ்மார்ட்போன் சந்தைகளில் அறிமுகப்படுத்த இருக்கிறது. Realme 10, Realme 10 Pro 5G மற்றும் Realme 10 Pro+ 5G ஆகியவை அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் வரும் நவம்பர் 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என்ற தகவலும் உலாவுகிறது. 

Realme 10 ஸ்மார்ட்போன் அறிமுகம் 

Realme இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் மாதவ் ஷெத், Realme 10 ஸ்மார்ட்போன் அறிமுகம் குறித்த சில முக்கிய விவரங்களை ஒரு நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளார். அதில், வரவிருக்கும் புதிய Realme 10 ஸ்மார்ட்போன் நவம்பர் 9, 2022-ல் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்படும் என கூறியிருக்கிறார். 

மேலும் படிக்க | ஜியோ 5ஜி நெட்வொர்கை 5ஜி மொபைலில் யூஸ் பண்ண முடியாது

ரியல்மி 10 சீரிஸ் மாடல்கள் 

ரியல் மீ நிறுவனம், விரைவில் அறிமுகப்படுத்த இருக்கும் ரியல்மீ 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் எத்தனை மாடல்கள் வெளியிடப்படும் என்ற தகவலை தெரிவிக்கவில்லை. ஆனால், முன்னதாக லீக்காகியிருக்கும் தகவலில் ரியல்மி 10 ப்ரோ மற்றும் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. இவை இரண்டும் 5ஜி மாடல்களாம். வரவிருக்கும் புதிய ரியல்மி 10 ஸ்மார்ட்போன் 4ஜி சேவையில் இயங்கக் கூடியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

ரியல்மி 10 சிறப்பம்சம் 

Realme 10 4G ஸ்மார்ட்போன் 180Hz டச் சாம்பிளிங் மாதிரி விகிதத்துடன் 6.5' இன்ச் முழு HD+ AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இந்த டிஸ்பிளே 90Hz ரெப்ரெஷ் ரேட் உடன் வரும். ஸ்கிராட்ச் மற்றும் டிராப்ஸ் சேதத்திற்கு எதிராகக் கூடுதல் பாதுகாப்பை வழங்க டிஸ்பிளே பாண்டா கிளாஸ் அடுக்கு இருக்கும். 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியை பேக், Realme 10 டிவைஸ் 8 + 8 என்று மொத்தமாக 16 ஜிபி ரேம் வரை இருக்கக் கூடும்.

ரியல் மீ 10 விலை 

இந்தியாவில் Realme 10 4G விலை ரூ.16999 விலையில் வரலாம் என்று வெளியாகியுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆரம்ப சலுகைகளுடன், அடிப்படை மாடலின் விலை சுமார் ரூ.15,000 வரை இருக்கலாம். இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் 5ஜி இணைப்பு அம்சம் இல்லாமல் வருகிறது. 

மேலும் படிக்க | எலான் மஸ்க் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக ஆட்டம் கண்ட ட்விட்டர்... முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News