கம்மி விலையில் இந்தியாவில் அறிமுகமான ரியல்மி நார்சோ 50

ரியல்மி நிறுவனம் புதிய Realme Narzo 50 5G, Realme Narzo 50 Pro 5G ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 20, 2022, 05:02 PM IST
  • புதிய ரியல்மி நார்சோ 5ஜி போன்கள் அறிமுகம்
  • இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது
  • மே 26 முதல் ரியல்மி 5ஜி போன்களை வாங்கலாம்
கம்மி விலையில் இந்தியாவில் அறிமுகமான ரியல்மி நார்சோ 50 title=

முதல்முறையாக ரியல்மி நிறுவனம் தனது நார்சோ பிராண்டில் இருந்து புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இது கடந்தாண்டு வெளியான ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனின் மேம்பட்ட பதிப்பாகும். இந்த ஸ்மார்ட்போன்களில் மீடியாடெக் சிப்செட், 90ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே கொடுத்துள்ளது. புதிதாக வெளியான ரியல்மி நார்சோ 5ஜி போன்களை குறித்த விரிவாக இங்கே காண்போம். 

ரியல்மி நார்சோ 50 5ஜி போனில் மொத்தம் மூன்று வேரியண்டுகள் வெளியாகியுள்ளது. இதன் 4ஜிபி + 64ஜிபி வகையின் விலை ரூ.15,999 ஆகும். அதேபோல் 4ஜிபி + 128ஜிபி வகையின் விலை ரூ.16,999 ஆகும், 6ஜிபி + 12 ஜிபி வேரியண்டின் விலை ரூ.17,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி போனில் மொத்தம் இரண்டு வேரியண்டுகள் உள்ளது. இதன் 6 ஜிபி + 128ஜிபி  வகையின் விலை ரூ.21,999 ஆகவும், 8 ஜிபி +128 ஜிபி இன் விலை ரூ.23,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | OPPO ஸ்மார்ட்போனில் பம்பர் உடனடி தள்ளுபடிகள் அறிவிப்பு

இந்த ஸ்மார்ட்போன்கள் இரு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். அவை ஹைப்பர் ப்ளூ, ஹைப்பர் பிளாக் ஆகும். அதேபோல் எச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ.2000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மே 26 முதல் அமேசான், ரியல்மி ஸ்டோர்ஸ், ரியல்மி இணையதளம் ஆகியவற்றில் இந்த ஸ்மார்ட்போன்களின் விற்பனைத் தொடங்குகிறது.

ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி அம்சங்களை பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போனில் 90 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.4 இன்ச் முழுஅளவு எச்டி+ சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 12 நிறுவப்பட்டுள்ளது.

மீடியாடெக் டிமென்சிட்டி 920 5G சிப்செட் இந்த போனை இயக்குகிறது. 5000எம்ஏஎச் பேட்டரியுடன், 33 வாட் சார்ஜிங் ஆதரவை பெறுகிறது. கேமரா பற்றி பேசுகையில் இதில் செல்பி கேமராவுக்காக 16எம்பி மெகாபிக்சல் லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பக்க கேமராவைப் பொருத்தவரை, 48எம்பி மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8எம்பி மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ், 2எம்பி மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவை உள்ளது.

ரியல்மி நார்சோ 50 5ஜி அம்சங்களை பற்றி பேசுகையில் நார்சோ 50 5ஜி போனில், 90 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.6 இன்ச் முழுஅளவு எச்டி+ டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | உங்களை உளவு பார்க்கும் 7 செயலிகள்! உடனே டெலிட் செய்யுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News