குறைந்த விலையில் அதிக நன்மை; வந்துவிட்டது Jio-வின் ஆண்டு திட்டம்!

சில வாரங்களுக்கு முன்பு ரூ.2121 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்த பின்னர், ரிலையன்ஸ் ஜியோ மற்றொரு நீண்டகால ப்ரீபெய்ட் திட்டத்தை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. 

Last Updated : Mar 9, 2020, 01:50 PM IST
குறைந்த விலையில் அதிக நன்மை; வந்துவிட்டது Jio-வின் ஆண்டு திட்டம்! title=

சில வாரங்களுக்கு முன்பு ரூ.2121 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்த பின்னர், ரிலையன்ஸ் ஜியோ மற்றொரு நீண்டகால ப்ரீபெய்ட் திட்டத்தை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. 

தொலைதொடர்பு ஆபரேட்டர்களான ஜியோ, வோடபோன் மற்றும் ஏர்டெல் ஆகியவை கடந்த டிசம்பர் மாதத்தில் விலைகள் உயர்த்தப்பட்டதிலிருந்து தங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களில் பெரிய மாற்றங்களைச் செய்து வருகின்றன. அந்த வகையில் பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன மற்றும் ஏற்கனவே உள்ள பல திட்டங்கள் அகற்றியுள்ளன.

உதாரணமாக, ஜியோ ரூ.2000 ஆண்டு திட்டத்தை நிறுத்தி ரூ.2121 திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன் செல்லுபடி காலத்தையும் 29 நாட்களாக குறைத்தது. இருப்பினும், ஜியோ ரூ.4999-க்கு ஒரு ஆண்டு ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்தது, எனினும் பின்னர் இந்த திட்டம் கடந்த ஆண்டு ரிலையன்ஸ் ஜியோவால் நிறுத்தப்பட்டது.

ரூ.4999 ப்ரீபெய்ட் திட்டம் ஜியோவிலிருந்து ஜியோ வரம்பற்ற அழைப்புகளுடன் வருகிறது, ஆனால் மற்ற நெட்வொர்க்குகளுக்கு 12,000 நிமிடங்கள் மட்டுமே அளிக்கிறது. இதன் அடிப்படையில் உங்கள் 12000 இலவச நிமிடங்கள் முடிந்ததும், உங்கள் அழைப்புகளுக்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 SMS வழங்குகிற போதிலும், வாடிக்கையாளர்களுக்கு போதுமானதாக இல்லை. காரணம் இத்திட்டத்தின் செல்லுபடி காலம் 360 நாட்கள் ஆகும், ஆனால் 360 நாட்களுக்கு இந்த திட்டத்தினை அளிக்கப்பட்ட சலுகைகள் மட்டுமே கொண்டு பயன்படுத்துவது இயலாத ஒன்றாக பார்க்கப்பட்டது.

தரவு நன்மைகள் பொருத்தவரையில்., இது 350GB 4G மொத்த தரவை வழங்குகிறது. இருப்பினும், மொத்த தரவு நேரத்திற்கு முன்பே நுகரப்படும் போது, ​​பயனர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது மற்றும் இலவச தரவுகளுக்கு பின்னர் தரவு வேகம் 64Kbps வேகத்தில் மூடப்படும். நாம் இதைப் பற்றி யோசிக்க வந்தால், மொத்தம் 350GB தரவு உண்மையில் விலைக்கு மிகவும் குறைவு. ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளன, அவை அதிக தரவு நன்மைகளையும், குறைந்த விலையிலும் வழங்குகின்றன.

இந்த ஆண்டு திட்டம் தற்போது மீண்டும் வந்திருந்தாலும், ஒரு பயனர் ரூ.199 மற்றும் ரூ.249 திட்டங்களில் தொடங்கும் மாதாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தில் தொடருதல் நல்லது, ஆண்டு திட்டங்களை காட்டிலும் இது அதிக தரவுகளை வழங்கும். மேலும் ஆண்டு திட்டத்தினால் அளிக்கப்டும் நன்மைகள் முடிந்தபிறகு நமது தேவைக்கேற்ப திட்டதை மாற்ற குறித்த காலம் வரை காத்திருத்தல் அவசியமாகிறது. மேலும், கூடுதல் அம்சங்களை கூடுதல் கட்டணம் கட்டி பெறுதலும் அதில பண விரையத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News