அசத்தும் அம்சங்களுடன் ஸ்மார்ட்போன் சந்தையை கலக்க வரும் 2 சாம்சங் 5G போன்கள்

Samsung Galaxy: சாம்சங், Samsung Galaxy A33 5G மற்றும் Samsung Galaxy A53 5G ஆகிய இரண்டு புதிய 5ஜ ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 18, 2022, 01:46 PM IST
  • சாம்சங் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது.
  • Samsung Galaxy A33 5G / A53 5G-ன் அம்சங்கள் அற்புதமாக உள்ளன.
  • மற்ற விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
அசத்தும் அம்சங்களுடன் ஸ்மார்ட்போன் சந்தையை கலக்க வரும் 2 சாம்சங் 5G போன்கள் title=

பிரபலமான மற்றும் நம்பகமான ஸ்மார்ட்போன் பிராண்டான சாம்சங், Samsung Galaxy A33 5G மற்றும் Samsung Galaxy A53 5G ஆகிய இரண்டு புதிய 5ஜ ஸ்மார்ட்போன்களை நேற்று அதாவது மார்ச் 17, 2022 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு 5ஜி ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் காரணமாக மக்கள் இவற்றை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த ஸ்மார்ட்போன்கள் பற்றிய விவரங்களை இந்த பதிவில் காணலாம். 

சாம்சங்க் கேலக்சி ஏ33 5ஜி: அம்சங்கள்

முதலில் சாம்சங் கேலக்சி ஏ33 5ஜி பற்றிய விவரங்களை காணலாம். சாம்சங்கின் இந்த 5ஜி ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் எஃப்எஹ்டி + சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே, 90ஹர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு மற்றும் ஐபி67 சான்றிதழுடன் வருகிறது. இதன் செயலி பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை என்றாலும், இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி அல்லது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி அல்லது 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகியவற்றைப் பெறலாம். இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டும் உள்ளது. இதன் மூலம் 1டிபி வரை சேமிப்பகத்தை விரிவாக்கலாம்.

கேமராவைப் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் கேமரா அமைப்பைப் பெறுவீர்கள். இதில் பிரதான சென்சார் 48எம்பி, 8எம்பி அல்ட்ராவைடு கேமரா, 5எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 2எம்பி டெப்த் கேமராவாக இருக்கும். இந்த போனில் 13எம்பி முன்பக்க கேமராவும் கிடைக்கும். 5,000mAh பேட்டரியுடன், 25வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் இதில் பயனர்கள் பெறலாம். 

மேலும் படிக்க | மைக்ரோசாஃப்ட் வழங்கும் புதிய இலவச வீடியோ எடிட்டர் செயலி! 

சாம்சங்க் கேலக்சி ஏ53 5ஜி: அம்சங்கள்

சாம்சங்க் கேலக்சி ஏ53 5ஜி ஆனது 6.5 இன்ச் எஃப்எஹ்டி + சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே, 120ஹர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு மற்றும் IP67 சான்றிதழுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதிலும் நீங்கள் 6ஜிபி அல்லது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி அல்லது 256ஜிபி சேமிப்பகத்தைப் பெறலாம். இதை மைக்ரோ எஸ்டி கார்டின் உதவியுடன் 1டிபி வரை விரிவாக்கலாம்.

இந்த ஸ்மார்ட்போனில் எம்பி மெயின் சென்சார், 12எம்பி அல்ட்ராவைடு கேமரா, 5எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 5எம்பி டெப்த் கேமரா உள்ளிட்ட நான்கு கேமராக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. செல்ஃபி எடுக்க 32எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது. பேட்டரியைப் பற்றி பேசுகையில், இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் 5,000mAh பேட்டரி மற்றும் 25வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் பயனர்கள் பெறலாம். 

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் நீலம், பீச், வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய இந்த நான்கு வண்ணங்களில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இந்த போன்களை எங்கு வாங்கலாம், விலை போன்ற விவரங்களை நிறுவனம் விரைவில் வெளியிடும்.

மேலும் படிக்க | முகக்கவசம் அணிந்திருக்கும் போது போனை அன்லாக் செய்வது எப்படி? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News