வாய்ப்பை நழுவ விடாதீர்கள்! ஆப் மூலம் ரீசார்ஜ் செய்தால் ரூ.50 மிச்சமாகும்...!

Save Rs 50 on Vodafone Idea's Rs 1499 Plan : மொபைல் ரீச்சார்ஜ் செய்யும்போது சலுகையை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், இப்போது அதற்கான வாய்ப்பு வந்துள்ளது. மொபைல் செயலி மூலம் நீங்கள் ரீச்சார்ஜ் செய்கிறீர்கள் என்றால், 50 ரூபாய் மிச்சப்படுத்தலாம்.

Written by - S.Karthikeyan | Last Updated : May 24, 2024, 07:07 AM IST
  • வோடாஃபோன் ஐடியா சூப்பர் பிளான்
  • மொபைல் ஆப் மூலம் ரீச்சார்ஜ் செய்யுங்கள்
  • 50 ரூபாய் உங்களுக்கு உடனடி தள்ளுபடி
வாய்ப்பை நழுவ விடாதீர்கள்! ஆப் மூலம் ரீசார்ஜ் செய்தால் ரூ.50 மிச்சமாகும்...! title=

இந்திய டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய போட்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல், வோடாஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலும், அவர்கள் வேறு நெட்வொர்க்குக்கு மாறாமல் இருக்கும் பொருட்டு சிறப்பு சலுகைகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஏர்டெல் மற்றும் ஜியோ 5ஜி நெட்வொர்க் வழங்க தொடங்கிவிட்ட நிலையில், வோடாஃபோன் மார்க்கெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கான நெருக்கடியை எதிர்கொள்ள தொடங்கியிருக்கிறது. இதனால் வோடாஃபோன் ஐடியா சிறப்பு சலுகையை கொண்டு வந்திருக்கிறது.  

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் கூகுள் செய்யும் பெரிய சம்பவம்... ஆப்பிளுக்கு ஆப்பு? - முழு பின்னணி

இதற்குகாரணம், Vi இன் பயனர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அதன் தற்போதைய சந்தாதாரர்கள் 5G இன் பலன்களை வழங்கும் நிறுவனங்களான ஜியோ அல்லது ஏர்டெல் சேவைகளைப் பெறத் தொடங்கியுள்ளனர். மொபைல் எண் டிரான்ஸ்பர் காரணமாக, அதாவது தொலைபேசி எண்ணை மாற்றாமல் டெலிகாம் சேவை வழங்குநரை மாற்றும் மூலம் வோடாஃபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் வேறு நெட்வொர்க்கிற்கு மாறிக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும், நீங்கள் இன்னும் உங்கள் வோடாஃபோன் ஐடியா எண்ணை போர்ட் செய்யாமல் Vi சேவைகளைப் பயன்படுத்தினால், இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய சலுகையைப் பயன்படுத்தி பணத்தைச் சேமிக்கலாம்.

ரூ.50 சேமிக்க முடியும்

Vodafone Idea (Vi) சந்தாதாரர்களுக்கு ரூ.1,449 விலையில் புதிய பிளான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிளானை ரீச்சார்ஜ் செய்பவர்களுக்கு கூடுதலாக புதிய சலுகையும் கொடுக்கப்படுகிறது. சந்தாதாரர்கள் இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து, Vi ஆப் மூலம் ரீசார்ஜ் செய்தால், இந்தத் திட்டத்திற்கு அவர்கள் ரூ.1,399 மட்டுமே செலுத்த வேண்டும். இதன் மூலம் நேரடியாக ரூ.50 சேமிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

என்னென்ன நன்மைகளைப் பெறுவீர்கள்?

ரூ.1,449 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் பயனர்கள் 180 நாட்கள் வேலிடிட்டியைப் பெறுவார்கள். இந்த திட்டம் தினசரி 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது மற்றும் ரீசார்ஜ் செய்த பிறகு, செல்லுபடியாகும் காலத்திற்கு தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்ப முடியும். இந்த திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு விருப்பத்தையும் வழங்குகிறது. கூடுதலாக, இந்த திட்டம் 30 ஜிபி கூடுதல் டேட்டாவையும் வழங்குகிறது.

1499 ரூபாய் பிளானில் மற்ற நன்மைகள் என்ன?

திட்டத்தில் கிடைக்கும் பிற நன்மைகளைப் பற்றி பேசுகையில், Vi Appஐப் பார்வையிடுவதன் மூலம் ஒவ்வொரு மாதமும் 2GB Backup data பெறலாம். இது வார இறுதி டேட்டா ரோல்ஓவர் வசதியையும் வழங்குகிறது. Binge All Night வசதியின் காரணமாக, நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை Access to unlimited data வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | ஒரே விலையில் கிடைக்கும் ஐபோன் 14 & ஐபோன் 14 பிளஸ் மொபைல்கள்... எதை வாங்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News