Electric Car: புக்கிங்கில் அசத்தும் எலக்டிரிக் கார் - சார்ஜ் இல்லாமல் கூட பயணிக்கலாம்

சார்ஜ் இல்லாமலேயே ஓடும் எலக்டிரிக் காரை இதுவரை 19 ஆயிரம் பேர் புக்கிங் செய்துள்ளனர்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 30, 2022, 06:48 PM IST
  • சோனா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தும் புதிய கார்
  • மின்சாரம் இல்லாமல் 112 கி.மீ ஓட்டலாம்
  • 19 ஆயிரம் பேர் இதுவரை முன்பதிவு செய்துள்ளதாக தகவல்
Electric Car: புக்கிங்கில் அசத்தும் எலக்டிரிக் கார் - சார்ஜ் இல்லாமல் கூட பயணிக்கலாம் title=

Sono Motors The Sion Electric: சார்ஜ் செய்யாமல் இயங்கக்கூடிய எலெக்ட்ரிக் கார் ஏதேனும் உள்ளதா? என நீங்கள் கேட்கலாம். அதற்கு ஆம் என பதில் சொல்லும் காலம் வந்துவிட்டது. அதுவும் சார்ஜ் செய்யாமல் 112 கி.மீ  வரை அந்தக் காரை ஓட்ட முடியும். கேட்பதற்கு உங்களுக்கு விந்தையாக இருக்கலாம்.  ஆனால், இந்தக் காரின் சிறப்பம்சங்களை தெரிந்தவர்கள் இதுவரை 19 ஆயிரம் முன்பதிவு செய்து காரின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.  சோனோ மோட்டார்ஸ் தயாரித்துள்ள இந்த காருக்கு ’தி சியோன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | Second Hand Car வாங்கணுமா? இங்க ஈசியா கடன் கிடைக்கும்

சோலார் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் மலிவு விலை கார். தி சியோனின் பாடி பேனலில் மொத்தம் 456 சோலார் செல்கள் நிறுவப்பட்டுள்ளன. நிலையான 54 kWh LFP பேட்டரி, 305 km பயணிக்கும் ஆற்றலை கொடுக்கிறது. ஆனால் சூரிய ஒளியில் இருந்து உருவாக்கப்படும் ஆற்றல் சராசரியாக 112-245 km (70-152 mi) வரை பயணிக்க வழிவகை செய்யும். மற்ற மின்சார கார்களுடன் ஒப்பிடும்போது சியோன் மின்சார காருக்கு 4 மடங்கு குறைவாக சார்ஜ் செய்யப்படுவதாக சோனா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. பேட்டரிக்கு தேவையான ஆற்றலை சூரிய ஒளியில் இருந்து எடுத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.   

மேலும் படிக்க | Long Drive Scooter: நீண்ட தூர பயணத்தை நிஜமாக்கும் சூப்பர் ஸ்கூட்டர்

புதிய அப்கிரேடு மாடலில் கொடுக்கப்பட்டுள்ள பேட்டரி மூலம் வீட்டுக்கு அல்லது மின்சார வாகனங்களை இயக்கக்கூடிய ஆற்றலை கூட எடுத்துக் கொள்ளலாம். அடுத்த 7 ஆண்டுகளில் 257,000 வாகனங்களை தயாரிப்பதை Sion இலக்காகக் கொண்டுள்ளது. இந்த கார்கள் அனைத்தும் பின்லாந்தில் தயாரிக்கப்படும். சோலார் மின்சார கார்களுக்கு 19,000-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றுள்ளது. இந்தக் காரின் விலை தோராயமாக ரூ. 20,17,571 விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News