ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உடனே வெளியேற வேண்டும் என ராணுவ தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது!
இதுதொடர்பாக பாகிஸ்தானில் ராவல் பிண்டியில் உள்ள ராணுவ தலைமை அலுவலகம் ராணுவ வீரர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து உடனே வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
பணியில் இருந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ராணுவதுறையின் அனைத்து தரத்தில் இருக்கும் வீரர்களும், பணியாற்றிய வீரர்களும் தங்களது குடும்பத்தாருக்கும் இதுகுறித்த அறிவிப்பினை குறித்து தெரியபடுத்தல் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராணுவ முத்திரிகைகள், ராணுவ பிரிவு தொடர்பான தகவல்களை பகிர்ந்துக்கொள்ளும் பேஸ்புக் குழுக்கள், பேஸ்புக் பங்கங்கள் முடக்கப்படும் எனவும் பாக்கிஸ்தான் ராணுவம் நம்புகிறது.
முக்கிய ராணுவ ரகசியங்கள் மற்றும் தகவல்கள் கசிவதை தடுக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.