மே 18 இந்தியாவில் அறிமுகமாகிறது விவோவின் 2 பிரீமியம் போன்கள்

Vivo X80 வரிசையில் Vivo X80 மற்றும் Vivo X80 Pro ஆகிய இரண்டு போன்கள் உள்ளன. இந்த இரண்டு போன்களும் விவோ சைனா மற்றும் குளோபல் லெவலில் முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது, தற்போது இது மே 18 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 10, 2022, 02:03 PM IST
  • Vivo X80 மற்றும் Vivo X80 Pro போன்கள்
  • மே 18 இந்தியாவில் அறிமுகம்
  • சர்வதேச சந்தையில் விவோ X80
மே 18 இந்தியாவில் அறிமுகமாகிறது விவோவின் 2 பிரீமியம் போன்கள் title=

விவோ சமீபத்திய எக்ஸ்80 தொடரை அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. விவோ எக்ஸ்80 தொடரின் இந்திய வெளியீட்டு நிகழ்வு மே 18 அன்று மதியம் 12:00 மணிக்கு நடைபெற உள்ளது. அதன்படி விவோ எக்ஸ்80  வரிசையில் விவோ எக்ஸ்80  மற்றும் விவோ எக்ஸ்80 ப்ரோ ஆகிய இரண்டு போன்கள் உள்ளன. இந்த இரண்டு போன்களும் விவோ சைனா மற்றும் குளோபல் லெவலில் முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது, தற்போது இவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். 

எக்ஸ்80 தொடரின் சிறப்பம்சங்கள்
விவோ எக்ஸ்80 ஆனது 8ஜிபி/128ஜிபி மற்றும் 12ஜிபி/256ஜிபி கான்ஃபிகரேஷனில் கிடைக்கும் என்றும் விவோ எக்ஸ்80 ப்ரோ சிங்கள் 12ஜிபி/256ஜிபி மாடலில் வரும் என்றும் கூறப்படுகிறது. இது தவிர, விவோ எக்ஸ்80 சீரிஸ் சீன பதிப்பில் இல்லாத மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டைப் பெறும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ரூ. 1,649க்கு Xiaomi 5G ஸ்மார்ட்போனை வாங்கலாம்

மலேசியாவில் விவோ எக்ஸ்80 இன் விலை ஆர்.எம் 3,499 ஆகும், இது இந்திய ரூபாயின் படி ரூ.61,600 ஆகும். அதே நேரத்தில், விவோ எக்ஸ்80 ப்ரோ இன் விலை ஆர்.எம் 4,999 ஆகும், இது இந்திய ரூபாயின் படி ரூ. 88,000 ஆகும்.

விவோ எக்ஸ்80 ஆனது மீடியா டெக் டாப் ஆஃப் தி லைன் டைமன்சிட்டி 9000 SoC மூலம் இயக்கப்படுகிறது, 12ஜிபி ஆன்போர்டு LPDDR5 ரேம், 4ஜிபி விரிவாக்கக்கூடிய ரேம் மற்றும் 256ஜிபி வேகமான 256ஜிபி யுஎஃப்எஸ் 3.1 சேமிப்பகம் தருகிறது.

இந்த போனில் 4,500எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது, இது விவோவின் சக்திவாய்ந்த 80வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது. அதேபோல், போனின் 80வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஃபோனை வெறும் 11 நிமிடங்களில் 0% முதல் 50% வரை சார்ஜ் செய்து 34 நிமிடங்களில் 0% முதல் 100% வரை சார்ஜ் செய்யும் என்று விவோ கூறுகிறது.

கேமராவை பொறுத்தவரை, விவோ எக்ஸ்80 ப்ரோ ஆனது விவோ வி1+ ஐஎஸ்பி மற்றும் அதனுடன் 50-மெகாபிக்சல் சாம்சங் ஜிஎன்வி சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்598 அல்ட்ராவைடு ஆங்கிள் லென்ஸ், 12 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்663 டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8 மெகாபிக்சல் பெரிஸ்கோப் லென்ஸ் ஆகியவை போனின் பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. போனின் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் உள்ளது.

மேலும் படிக்க | ரூ.35,990 லேட்டஸ்ட் Oppo Reno6 5G போனின் விலை வெறும் ரூ. 13,040

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News