ரூ. 139 திட்டத்தை அறிமுகப்படுத்தி வோடபோன்!! சிறப்பு என்ன?

வோடபோன் ரூ. 139 என்ற புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Apr 25, 2019, 09:33 PM IST
ரூ. 139 திட்டத்தை அறிமுகப்படுத்தி வோடபோன்!! சிறப்பு என்ன?
File photo

புதுடில்லி: வோடபோன் ரூ. 139 என்ற புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் கூடுதலாக டேட்டா தரவு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளர்கள் 5GB 3ஜி மற்றும் 4ஜி தரவுகளையும் பெறுவார்ள். இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும். இது தவிர வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி மற்றும் ரோமிங் வசதி கிடைக்கும்.

கடந்த வாரம் வோடபோன் ரூ 999 திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் 365 நாட்கள் செல்லுபடி ஆகும். இது 12 ஜிபி தரவு, தினசரி 100 எஸ்எம்எஸ். வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. ரூ. 139 திட்டம் போலவே ரூ. 119, ரூ. 129, மற்றும் ரூ. 169 திட்டங்களையும் வாடிக்கையாளர்களுக்கு வோடபோன் வழங்கி வருகிறது.