வாட்ஸ்அப் மெசேஜை தவறுதலாக ஆர்க்கிவ் செய்துவிட்டீர்களா?

வாட்ஸ்அப் மெசேஜை தவறுதலாக ஆர்க்கிவ் செய்துவிட்டால் என்ன செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 30, 2022, 10:31 PM IST
வாட்ஸ்அப் மெசேஜை தவறுதலாக ஆர்க்கிவ் செய்துவிட்டீர்களா? title=

உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் சிறந்த மெசேஜ் செயலியாக இருக்கிறது. இந்த செயலியை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். இதற்கு முக்கிய காரணம் எராளமான மெசேஜிங் செயலிகள் இருக்கின்றன. அதில் சிலவற்றை மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். பல அம்சங்கள் பற்றி நமக்கு தெரிவதில்லை. தவறுதலாக வாட்ஸ்அப் சேட் ஆர்ஷிவ் (Archive) செய்யப்பட்டால், அதை எப்படி unarchive செய்து மீண்டும் அந்த சேட் கொண்டு வருவது? குறித்து இங்கு பார்க்கலாம்.

WhatsApp archive என்றால் என்ன?

தனிநபர் அல்லது வாட்ஸ்அப் குழுவிலிருந்து மெசேஜ் பெற விரும்பாத பயனர்கள் சேட்-டை ஆர்ஷிவ் செய்து வைக்கலாம். அது உங்கள் சேட் பக்கத்திலிருந்து மறைந்துவிடும். இருப்பினும் அந்த சேட் தகவல்கள் அழியாது.

மேலும் படிக்க | Flipkart Black Friday Sale: இந்த அட்டகாசமான போனை இலவசமாக வாங்கலாம்

Archive மற்றம் unarchive செய்வது எப்படி?

நீங்கள் ஒரு குறிப்பிட்ட சேட்-டை மறைக்க விரும்பினால் அல்லது குரூப் சேட்டிலிருந்து நோட்டிவிகேஷன் பாப்-அப் வேண்டாம் என நினைத்தால் ஆர்ஷிவ் ஆப்ஷன் பயனுள்ளதாக இருக்கும். Archive,unarchive ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களில் வேறுபடும்.

ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் சேட் ஆர்ஷிவ் செய்ய முதலில் சேட் பக்கம் சென்று எந்த சேட்-டை ஆர்ஷிவ் செய்ய வேண்டும் என்பதை செலக்ட் செய்ய வேண்டும். அந்த சேட்- டை அழுத்தி பிடிக்க வேண்டும், இப்போது பாக்ஸ் போன்ற ஐகான் ( downward arrow) பட்டனை கொடுக்க வேண்டும். இப்போது அந்த சேட் ஆர்ஷிவ் செய்யப்பட்டு archived section பக்கத்திற்கு சென்று விடும்.

இப்போது சேட் அன்-ஆர்ஷிவ் செய்ய விரும்பினால், சேட் பக்கத்தில் மேலே, வலப்புறத்தில் உள்ள archived section மெனுவிற்கு செல்ல வேண்டும். அங்கு எந்த சேட் அன்-ஆர்ஷிவ் செய்ய வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து அழுத்தி பிடிக்க வேண்டும். பாக்ஸ் போன்ற ஐகான் (upward arrow) பட்டனை கொடுத்தால் சேட் அன்-ஆர்ஷிவ் செய்யப்படும்.

மேலும் படிக்க | மக்களே ரெடியா! பட்ஜெட் விலையில் விவோ களமிறக்கப்போகும் 5G ஸ்மார்ட்போன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News