Flipkart Black Friday Sale: இந்த அட்டகாசமான போனை இலவசமாக வாங்கலாம்

Flipkart Black Friday Sale: இந்த விற்பனையில் பல அற்புதமான சலுகைகள் கிடைக்கின்றன. இந்த சலுகைகள் வாடிக்கையாளர்கள் வியக்கும் வகையில் உள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 30, 2022, 04:21 PM IST
  • Xiaomi 11i ஹைப்பர்சார்ஜ் 5G ஃபோனை இலவசமாக உங்கள் வசமாக்கிக்கொள்ளலாம்.
  • பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில், பயனர்ளுக்கு அட்டகாசமான வங்கி சலுகை கிடைக்கின்றது.
  • சிட்டி பேங்க் கார்டுகளில் பயனர்கள் 10% முதல் 12% வரை தள்ளுபடி பெறுகிறார்கள்.
Flipkart Black Friday Sale: இந்த அட்டகாசமான போனை இலவசமாக வாங்கலாம் title=

பிளிப்கார்ட்டில் பிளாக் ஃப்ரைடே சேல் நடந்து வருகிறது. இன்று இந்த விற்பனையின் கடைசி நாளாகும். இந்த விற்பனையில் பல அற்புதமான சலுகைகள் கிடைக்கின்றன. இந்த சலுகைகள் வாடிக்கையாளர்கள் வியக்கும் வகையில் உள்ளன. இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அனைத்து பிராண்டின் ஸ்மார்ட்போன்களும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. 

பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில், 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யப்படும் Xiaomi 11i ஹைப்பர்சார்ஜ் 5G ஃபோனை இலவசமாக உங்கள் வசமாக்கிக்கொள்ளலாம். இந்த சேலில் பிளிப்கார்ட்டில் கிடைக்கும் பெரும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் மூலமாக இந்த போனை வாடிக்கையாளர்கள் இலவசமாக வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். 

Xiaomi 11i Hypercharge 5G: அம்சங்கள்

Xiaomi 11i ஹைப்பர்சார்ஜ் 5G ஃபோன், 6.67 இன்ச் முழு எச்டி பிளஸ் அமோல்ட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும் இதன் கேமரா பிரம்மாண்டமானது. இந்த போனில் 108 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமராவுடன் 16 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. 

மேலும் படிக்க | Flipkart Black Friday Sale: ஐபோனில் இதுவரை இல்லாத தள்ளுபடி, முந்துங்கள் 

வங்கி சலுகைகள்

பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில், பயனர்ளுக்கு அட்டகாசமான வங்கி சலுகை கிடைக்கின்றது. இந்த சலுகைக்குப் பிறகு, போனின் விலை ரூ.20,499 ஆக குறைந்துவிடும். 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய Xiaomi 11i ஹைப்பர்சார்ஜ் 5G ஃபோனின் பட்டியல் விலை பிளிப்கார்ட்டில் ரூ.24,999 ஆகும்.

சிட்டி பேங்க் கார்டுகளில் பயனர்கள் 10% முதல் 12% வரை தள்ளுபடி பெறுகிறார்கள். வங்கி சலுகைக்குப் பிறகு, போனின் விலை ரூ.20,499 ஆக குறையும். 

பரிமாற்ற சலுகை

போனில் ரூ.20,500 வரையிலான பரிமாற்ற சலுகை, அதாவது எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. எனினும், இந்த எக்ஸ்சேஞ் சலுகையின் பயனை பெற, வாடிக்கையாளர்கள் தங்கள் போன் நல்ல நிலையில் இருப்பதையும், லேட்டஸ் மாடல் போனாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அப்படி இருந்தால், வாடிக்கையாளர்கள் Xiaomi 11i ஹைப்பர்சார்ஜ் 5G போனில் மேலும் 20,500 ரூபாய் தள்ளுபடியைப் பெறலாம். இந்த சலுகையைப் பயன்படுத்திய பிறகு, இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போனை முற்றிலும் இலவசமாக வாங்க முடியும். 

மேலும் படிக்க | WhatsApp பயனர்களுக்கு ஷாக்: WhatsApp அழைப்புக்கு இனி பணம் வசூலிக்கப்படும்!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News