வாட்ஸ் அப் உரையாடல்கள் ஒருபோதும் அழிக்க முடியாது என்று ஆப்பிள் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
'வாட்ஸ் அப்' மேற்கொள்ளப்படும் உரையாடல்களை என்கிரிப்டு செய்து 3-வது நபர் பார்க்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு வசதியை வழங்கி வருகிறது.
இந்நிலையில், வாட்ஸ் ஆப் உரையாடல்களை நாம் அழித்துவிட்டாலும் அது முற்றிலுமாக அழியாது என ஆப்பிள் இயங்குளத்தின் பிரபல பாதுகாப்பு வல்லுனர் ஜோனதன் செட்சியார்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்:- 'வாட்ஸ் ஆப்'-பில் உரையாடல்களை நாம் டெலிட் செய்தாலும், கிளியர் செய்தாலும் அல்லது 'கிளியர் ஆல் உரையாடல்' மூலமாக அழித்தாலும் அந்த உரையாடல்கள் முற்றிலுமாக அழிந்துவிடாது. அதை 3-வது நபரால் கண்காணிக்க இயலும். எனவே, போனில் இருந்து 'வாட்ஸ் ஆப்'-ஐ அழித்து விடுவது ஒன்றே ஒரே தீர்வு. என்கிரிப்சன் வசதியை கொண்டுவந்துள்ள போதிலும் இன்னும் 'வாட்ஸ் ஆப்' உரையாடல்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருக்கிறது”என தெரிவித்தார்.
மேலும் இதை அவரே சோதித்து பார்த்து உறுதி செய்துள்ளதாக தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.