சியோமியின் ஜொலிக்கும் ஸ்மார்ட்ஃபோனை வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம்

சியோமி நிறுவனத்தின் புத்தம் புதிய ஸ்டைலான வடிவமைப்புடன் Xiaomi Civi 1S ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 21, 2022, 06:59 PM IST
  • சியோமி நிறுவனத்தின் புதிய மாடல் சீனாவில் அறிமுகம்
  • இந்தியாவில் அறிமுக தேதி விரைவில் அறிவிப்பு
  • 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
சியோமியின் ஜொலிக்கும் ஸ்மார்ட்ஃபோனை வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் title=

சீன நிறுவனமான சியோமி, புத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை சந்தையில் அடிக்கடி இறக்கிக் கொண்டே இருக்கும். அந்தவகையில், Xiaomi Civi 1S என்ற புதிய ஸ்மார்ட்போனை சீனாவில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 64 எம்பி கேமரா மற்றும் வலுவான பேட்டரி இந்த போனின் சிறப்பம்சங்களாக உள்ளது. 

சியோமி சிவி 1எஸ் விலை

சியோமி சிவி ஓன்எஸ் ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டது.  இந்த வேரியண்டின் விலை இந்திய ரூபாயில்  27,181 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி வேரியண்ட் விலை 30,684 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

மேலும் படிக்க | Netflix: இனி கணக்கு பகிரப்பட்டால் கூடுதல் கட்டணமா; நிறுவனம் கூறுவது என்ன

சியோமி சிவி 1எஸ் வடிவமைப்பு

Xiaomi Civi 1S ஸ்மார்ட்போன், ஏற்கனவே சந்தையில் இருக்கும் Xiaomi Civi போலவே இருக்கிறது. அதன் பின்பக்க பேனல் கண்ணாடியால் ஆனது. இதன் தடிமன் 6.98 மிமீ மற்றும் 166 கிராம் எடை கொண்டது. கருப்பு, நீலம், இளஞ் சிவப்பு மற்றும் வெள்ளி ஆகிய கலர்களில் வரும் இந்த ஸ்மார்ட்போனை, வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 

சியோமி சிவி ஓ1எஸ் டிஸ்ப்ளே

டிஸ்பிளேவைப் பொறுத்த வரையில், 2400 x 1080 பிக்சல்கள் (FHD+) தீர்மானம் மற்றும் 120Hz வரை புதுப்பிப்பு வீதத்துடன் 6.55-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G பிளஸ் சிப்செட் மூலம் LPDDR4x ரேம் மற்றும் UFS 2.2 ஸ்டோரேஜூடன் இணைக்கப்பட்டிருக்கும். ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் MIUI 13-ல் செயல்படும்.

சியோமி சிவி 1எஸ் கேமரா

சியோமி சிவி ஓன்எஸ் மூன்று கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த அமைப்பில் OIS-இயக்கப்பட்ட 64MP ப்ரைமரி ஷூட்டர், 8MP Sony IMX355 அல்ட்ரா-வைட் யூனிட் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் ஆகியவற்றை கொண்டிருக்கும். முன்பக்கத்தில், பஞ்ச்-ஹோல் ஆட்டோஃபோகஸ் மற்றும் டூயல் 32MP Sony IMX616 ஸ்னாப்பர் இருக்கும். 

மேலும் படிக்க | ஜில்லுனு ஒரு சலுகை: ரூ. 5,290-க்கு டபிள் டோர் கோத்ரெஜ் ஃப்ரிட்ஜ், பிளிப்கார்டில் கூல் ஆஃபர்

சியோமி சிவி 1எஸ் பேட்டரி

சியோமி சிவி ஓன்எஸ் ஸ்மார்ட்போனில் 4,500mAh பேட்டரி இருக்கும். 55W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன், 5 ஜி டூயல் சிம் ஆப்சனைக் கொண்டிருக்கும்.  மேலும், WiFi 6, புளூடூத் 5.2, GNSS, NFC மற்றும் USB Type-C ஆகிய அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.  Dolby Atmos-சப்போர்ட் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் அண்டர்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிடவையும் இருக்கும். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News