Swiggy: இனி டெலிவரி பாய் அல்ல; ட்ரோன்கள் உங்கள் வீட்டு கதவை தட்டலாம்..!!

இந்தியாவில் ட்ரோன்களைப் பயன்படுத்தி, உணவு டெலிவரி விரைவில் தொடங்கும் என்றால், ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம்... ஸ்விக்கி விரைவில் உணவுகளை ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்ய தொடங்க உள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 19, 2021, 12:50 PM IST
  • ANRA ஒரு வீடியோவில், ட்ரோன்களை பயன்படுத்தி எவ்வாறு, டெலிவரிகள் மேற்கொள்ளப்படும் என்பதை விளக்கியது.
  • ஏற்கனவே, ட்ரோன்கள் (Drone) மூலம் மருந்துகளை விநியோகிக்க அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • Beyond Visual Line of Sight ட்ரோன்களை இயக்குவதற்கான அனுமதிகளைப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Swiggy: இனி டெலிவரி பாய் அல்ல; ட்ரோன்கள் உங்கள் வீட்டு கதவை தட்டலாம்..!!  title=

இந்தியாவில் ட்ரோன்களைப் பயன்படுத்தி, உணவு டெலிவரி விரைவில் தொடங்கும் என்றால், ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம்... ஸ்விக்கி விரைவில் உணவுகளை ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்ய தொடங்க உள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஸ்விக்கியின் ட்ரோன் டெலிவரிகான கூட்டாளி நிறுவனமான, அன்ரா டெக்னாலஜிஸ் (ANRA Technologies), பாதுகாப்பு அமைச்சகம் (MoD), விமான இயக்குநரகம் (DGCA) மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (MOCA) ஆகியவற்றிலிருந்து இறுதி அனுமதி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான சோதனைகள் அடுத்த சில நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பிறகு அதிகாரப்பூர்வமாக ட்ரோன் (Drone) மூலம் உணவு டெலிவரி உங்கள் வீட்டு வாசலில் தொடங்கும்.

அன்ரா டெக்னாலஜிஸ் நிறுவனம் பியண்ட் விஷுவல் லைன் ஆஃப் சைட் (Beyond Visual Line of Sight - BVLOS)ட்ரோன்களை இயக்குவதற்கான அனுமதிகளைப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில வாரங்களுக்கு, ANRA குழு உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாபில், முறையே ஈட்டா மற்றும் ரூப்நகர் மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் ட்ரோன் டெலிவரி சோதனைகளை நடத்த உள்ளது.

ALSO READ | Drone Medicine Delivery: டிரோன்கள் மூலம் வீட்டு வாசலுக்கே மருந்து விநியோகம்

ஸ்விக்கியின் முதன்மை திட்ட மேலாளர் ஷில்பா ஞானேஷ்வர் குறித்து கருத்து தெரிவிக்கையில், இந்த திட்டத்தின் மூலம் நிறுவனம் “ட்ரோன் தொழில்நுட்பத்தின் நீண்ட தூரம் பயணிப்பது திறன்களை சிறந்த முறையில் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்றார்.

ANRA  சமீபத்தில் ஒரு வீடியோவில், ட்ரோன்களை பயன்படுத்தி எவ்வாறு, டெலிவரிகள் மேற்கொள்ளப்படும் என்பதை விளக்கி  என்பதைக் காட்டியது. வீடியோவில், ஒரு ட்ரோன் ஒரு சிறிய உணவு பேக்கெட்டை எடுப்பதும், ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு பறந்து சென்று, பாக்கெட்டை வழங்குவதற்காக தரையில் திரும்புவதும் காணப்படுகிறது.

ஏற்கனவே, ட்ரோன்கள் (Drone) மூலம் மருந்துகளை விநியோகிக்க அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதார மன்றத்துடன் இணைந்து தெலுங்கானா அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ‘மெடிசின் ஃப்ரம் தி ஸ்கை’ (‘Medicine from the Sky’ )திட்டத்தின் கீழ் மருந்துகளை ட்ரோன் மூலம் விநியோகிக்கும்  திட்டத்தை தொடங்கி வைப்பதாக, சமீபத்தில் டன்சோ (Dunzo) என்னும் டெலிவரி நிறுவனம் அறிவித்தது. COVID-19 தடுப்பூசிகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அவசர மருத்துவ பொருட்களை டெலிவரி செய்யும் நோக்கில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ALSO READ | Windows 11: விண்டோஸ் 10, 8.1 பயனர்களுக்கு இலவசமாக கிடைக்குமா.. உண்மை நிலை என்ன

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News