பிரபல ஆன்லைன் வீடியோ வலைதளமான Youtube தனது வாடிக்கையாளர்கள் சம்பாதிப்பதற்பான புதிய வழியினை அறிமுகம் செய்துள்ளது!
Youtube தளத்தில் சோனல்கள் துவங்கி அதன் மூலம் சம்பாதிக்கும் வாடிக்கையாளர்கள் சில நிபந்தனைகளை கடக்கவேண்டி உள்ளது. அந்த வகையில் சேனல் வைத்திருக்கும் நபர்கள் 100000 பின்தொடர்வர்களை கொண்டிருக்க வேண்டும். நிகழ் நிலை பதிவு, சாதாரண பதிவுகள் என பல வீடியோக்களை பதிவேற்றம் செய்வதன் மூலம் அதிக பார்வையாளர்களை பெற வேண்டும்.
இத்தகு செயல்பாடுகளை செய்வதன் காரணமாகவே Youtube பயனர்கள் பணத்தை சம்பாதிக்க முடியும் என்ற நிலை இருந்துவந்த நிலையில், தற்போது பயனர்கள் அவர்களது சேனல்களில் நேரடியாக வியாபரம் செய்யவதன் மூலமும் பணம் சம்பாதிக்கலாம் என தெரிவித்துள்ளது. அதன்படி பயனர்கள் தங்கள் சேனல்களில் ஆடைகள், தொழில்நுட்ப உபகரணங்கள் முதலியனவற்றை வியாபாரம் செய்யவும் அனுமதி வழங்குகின்றது.
தற்போதைய காலக்கட்டத்தில் பல வீடியோ ஸ்ட்ரீமீங் வலைதளம் உறுவாகிவரும் நிலையில் அவைகளுடன் போட்டி போட வேண்டிய கட்டாயத்தில் Youtube உள்ளது. தற்போது 1.9 பில்லியன் பயனர்களுக்கும் மேல் கொண்டுள்ள Youtube தனது பயனர்களை தக்கவைத்துக்கொள்ள இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.