பென்ஷன் இல்லாதவர்கள், ஓய்வுக்குப் பின், நல்ல வருமானம் கிடைக்கும் முதலீடுகளில் திட்டமிட்டு முதலீடு செய்தால், ஓய்வு காலத்தில் யாரையும் சாராமல், வசதியாக வாழலாம். நல்ல வருமானம் தரும், அதே சமயத்தில் மிகக் குறைந்த ரிஸ்க் கொண்ட முதலீட்டு விருப்பங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்வது மிகப்பெரிய சவாலாகும். எனவே ஓய்வு நிதி கார்பஸின் பெரும்பகுதி பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் இருக்க வேண்டும். அதற்காக இருக்கும், எல்லாப் பணத்தையும் நிலையான வருமானத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதல்ல. அதில் ஒரு பகுதியை கொஞ்சம் ரிஸ்க் எடுத்து முதலீடு செய்தால், வருமானத்திற்கு குறைவில்லாமல் இருக்கும்.
உங்கள் ஓய்வூதிய நிதியில் கொஞ்சம் நிதியை எடுத்து, வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் திட்டங்களின் முதலீடு செய்யப்பட வேண்டும். கீழ்கண்ட வகையில், உங்கள் ஒயவு பெறும் போது பெற்ற நிதியை பல திட்டங்களில் பிரித்து முதலீடு செய்ய திட்டமிடலாம்.
முதலீடு | முதலீட்டு தொகை | வருமானம் (%) | மாத வருமானம் |
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் | ₹30 லட்சம் | 8.2% | ₹20,500 |
வருடாந்திர வருமானத் திட்டம் | ₹25 லட்சம் | 6 % - 6.5% | ₹13,000 |
நிலையான வைப்பு / அஞ்சலகத்தின் POMIS | ₹10 லட்சம் | 7.4% | ₹6,166 |
பரஸ்பர நிதிகள் | ₹25 லட்சம் | 7% - 8% | முதலீட்டு முறையின் அடிப்படையில் வருமானம் |
ஈக்விட்டி ஃபண்டுகள் | ₹10 லட்சம் | சந்தை நிலையை பொறுத்து | முதலீட்டு முறையின் அடிப்படையில் வருமானம் |
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்:
மத்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் அஞ்சல் அலுவலகத் திட்டமான இதில், மூத்த குடிமக்களுக்கு 8.2% உறுதியான வருவாயை வழங்குகிறது. இது வங்கி வைப்புத்தொகையை விட அதிகமாகும். இந்தத் திட்டத்தில் ₹30 லட்சம் வரை முதலீடு செய்யுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு தனிக் கணக்கு இருந்தால், அவருடைய பெயரிலும் ₹30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த முதலீடு மிகவும் பாதுகாப்பானது.
வருடாந்திர வருமானம் கொடுக்கும் முதலீட்டு திட்டங்கள்:
வருடாந்திர வருமானத் திட்டம் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உறுதியான வருமானத்தை வழங்குகிறது. இது நீண்ட கால முதலீட்டு அபாயத்தைக் குறைக்கிறது. ஓய்வூதிய நிதியில் குறைந்தபட்சம் 30% வருடாந்திர முதலீட்டு திட்டங்களில் செய்யப்பட வேண்டும். ஓய்வூதியத் திட்டங்கள் அல்லது NPS (தேசிய ஓய்வூதியத் திட்டம்) முதிர்ச்சியடையும் போது, அதில் ஒரு பகுதியும் கட்டாயமாக வருடாந்திர வருமான முதலீட்டில் சேர்க்கப்படும்.
நிலையான வைப்பு மற்றும் அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம்:
எஃப்டி என்னும் நிலையான வைப்பு மற்றும் அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டங்களிலிருந்து நீங்கள் உறுதியான வருவாயைப் பெறுவீர்கள், அவற்றில் எந்த ஆபத்தும் இல்லை. ஒவ்வொரு மாதமும் ₹6,166 வருமானம் தரும் இந்தத் திட்டங்களில் நீங்கள் ₹10 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
பரஸ்பர நிதிகள்:
பங்குகளை குறைந்த விலையில் வாங்கி அதிக விலையில் விற்பதன் மூலம் நிலையான வருமானத்தை அளிக்கும் ஈக்விட்டி திட்டங்களாகும். இவற்றின் மூலம் கிடைக்கும் நீண்ட கால மூலதன ஆதாயங்கள் ₹1.25 லட்சம் வரை வரி இல்லை. ஆர்பிட்ரேஜ் நிதி வகை பரஸ்பர நிதி முதலீடுகள் ஓய்வு பெற்றவர்களுக்கான சிறந்த முதலீடாக இருக்கும்.
ஈக்விட்டி ஃபண்டுகள்:
ஓய்வுக்குப் பிறகு, உங்களுக்கு முழுத் தொகையும் உடனடியாகத் தேவையில்லை என்ற நிலை இருந்தால், அதில் ஒரு பகுதியை (10-20%) பங்குகளில் முதலீடு செய்யுங்கள். இன்டெக்ஸ் ஃபண்டுகள் அல்லது ஃப்ளெக்ஸி கேப் திட்டங்கள் போன்ற ஈக்விட்டி ஃபண்டுகள் வருமானத்தை அள்ளிக் கொடுப்பவை. இவை வருவாயை நிலையாக வைத்து நீண்ட காலத்திற்கு நல்ல பலனைத் தரும்.
மேலும் படிக்க | EPFO புத்தாண்டு பரிசு: PF உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் 3 குட் நியூஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ