5 ரூபாய் நாணயங்களை ரத்து செய்யும் ரிசர்வ் வங்கி? இனி பயன்பாட்டில் இருக்காது?

இந்தியாவில் பித்தளை நாணயங்களை எளிதாக பார்க்க முடியும் அதே வேளையில் எஃகு நாணயங்களை அதிகம் பார்க்க முடிவதில்லை. மத்திய அரசாங்கமும், இந்திய ரிசர்வ் வங்கியும் பழைய 5 ரூபாய் நாணயங்களை அச்சிடுவதில்லை.

Written by - RK Spark | Last Updated : Dec 17, 2024, 07:03 AM IST
  • நிறுத்தப்படும் 5 ரூபாய் நாணயங்கள்?
  • மத்திய அரசு புதிய நடவடிக்கை.
  • ஆர்பிஐ தரப்பில் இருந்து விளக்கம்.
5 ரூபாய் நாணயங்களை ரத்து செய்யும் ரிசர்வ் வங்கி? இனி பயன்பாட்டில் இருக்காது? title=

தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய 5 ரூபாய் நாணயங்களை நிறுத்த இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இனி இந்த நாணயங்களை அச்சிடுவதை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும், புழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் எத்தனை நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் அச்சிட வேண்டும் என்பதை மத்திய அரசாங்கம் தான் தீர்மானிக்கிறது. பின்னர், தேவையான நாணயங்களை அச்சிடுமாறு மத்திய அரசு இந்திய ரிசர்வ் வங்கியிடம் கூறுகிறது. ரிசர்வ் வங்கியும் நாணயங்களை மத்திய அரசின் உத்தரவின் அடிப்படையில் அச்சிடுகிறது. இந்நிலையில் தற்போது ​​5 ரூபாய் நாணயங்கள் அதிகம் புழக்கத்தில் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க | EPFO புத்தாண்டு பரிசு: PF உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் 3 குட் நியூஸ்

இந்தியாவில் நாணயங்கள் அல்லது ரூபாய் நோட்டுகள் பயன்படுத்துவதை நிறுத்தவும், புதியவற்றை உருவாக்கவும் பின்பற்ற வேண்டிய சிறப்பு விதிகள் உள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதிய நாணயங்களை வெளியிட அல்லது பழைய நாணயங்கள் அச்சிடப்படுவதை நிறுத்த மத்திய அரசிடம் அனுமதி கேட்க வேண்டும். அரசின் ஒப்புதலுக்கு பிறகு தான் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும். மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு கருப்பு பணத்தை ஒழிக்க புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. அதற்கு பதில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டிற்கு வந்தது.

தற்போது, ​​இந்தியாவில் ரூ.1 முதல் ரூ.20 வரையிலான நாணயங்கள் பயன்பாட்டில் உள்ளன. அதே சமயம் ரூ. 30, ரூ 50 மற்றும் 100 ரூபாய் மதிப்பிலான புதிய நாணயங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்தும் மத்திய அரசிடம் யோசனைகள் உள்ளன. இந்நிலையில் 5 ரூபாய் நாணயம் ரத்து செய்யப்படுகிறதா என்ற தகவல் வெளியாகி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு நாணயங்கள் அச்சிடுவது தொடர்பான புதிய விதிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியிடம் இருந்து அதிகாரபூர்வமாக தகவல் எதுவும் இல்லை.

தற்போது, ​​நம் நாட்டில் இரண்டு வகையான 5 ரூபாய் நாணயங்கள் உள்ளன. பளபளப்பான பித்தளை மற்றும் வெள்ளி நிற எஃகு நாணயங்கள் பயன்பாட்டில் உள்ளன. பித்தளை நாணயங்களை எளிதாக பார்க்க முடியும் அதே வேளையில், எஃகு நாணயங்களை அதிகம் பார்க்க முடிவதில்லை. மத்திய அரசாங்கமும், இந்திய ரிசர்வ் வங்கியும் பழைய 5 ரூபாய் நாணயங்களை அச்சிடுவதில்லை. எனவே, புழக்கத்தில் பித்தளை நாணயங்கள் அதிகளவில் உள்ளது.

 

பழைய 5 ரூபாய் நாணயங்களை அச்சிடுவதை மத்திய அரசு நிறுத்தியதற்கு சில காரணங்கள் கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள 5 ரூபாய் நாணயங்கள் பங்களாதேஷுக்கு கடத்தப்படுவதாகவும், அங்கு அவை உருக்கப்பட்டு கூர்மையான பிளேடுகள் செய்ய பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் 5 ரூபாய் நாணயங்களை அச்சிடுவதை மத்திய அரசு நிறுத்தியாகவும் கட்டுக்கதைகள் உள்ளன. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி இது பற்றி அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை.

மேலும் படிக்க | EPFO முக்கிய மாற்றங்கள் விரைவில்: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், ஓய்வூதியம் அதிகரிக்கும்... தயாராகும் அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News