இந்திய நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது -பிரதமர் மோடி!
உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day, WED) ஆண்டுதோறும் ஜூன் 5 ம் தேதி புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972-ம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில பத்தாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. உலக சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதும், அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமாகும்.
இந்நிலையில் இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி உலக சுற்றுச்சூழல் தினவிழாவில் பேசிய போது, உலகளவில் பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும் நாட்டில் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
We are proud to be the global host of #WorldEnvironmentDay. Our motto is more crop per drop. We are already the 5th largest producer of Solar energy in the World. Not also this we are the 6th largest producer of renewable energy in the World: PM Narendra Modi pic.twitter.com/UWciFnm9GC
— ANI (@ANI) June 5, 2018