கன்னியாகுமாரி, இராமநாதபுரம் கடற்புகுதியில் ஏப்., 21 முதல், கடல் கொந்தளிப்பு மற்றும் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது!
கடல் சீற்றம் அதிகமாக இருப்பது பற்றி மாவட்ட நிர்வாகங்களுக்கு முன்னதாகவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை கடல் அலைகள் உயரும் என இன்சாட் அமைப்பு தெரிவித்துள்ளது, எனவே கடலோர பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம். கடலுக்குள் படகுகளை எடுத்துதச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், கடலோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள் மற்றும் அதிலுள்ள வலைகளை பாதுகாத்து கொள்ளும்படியும் தெரிவிகப்ப்பட்டுள்ளது.
கடல் சீற்றம் இன்றும் தொடரும்....!
கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில், கடலோரத்தின் தாழ்வான பகுதிகளில், கரைக்குள் கடல் நீர் புகும் பின், படிப்படியாக, சீற்றம் குறையும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மத்திய அரசின் கடலியல் தகவல் சேவைக்கான, தேசிய மைய அறிவுரைப்படி, இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், மாநிலம் முழுவதும் வறண்ட வானிலை நிலவும், உள்மாவட்டங்களில் சில இடங்களில், இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என, வானிலை மையம் முன் அறிவிப்பு செய்துள்ளது.
நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, சேலம் மாவட்டம், ஓமலுாரில், 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
திருத்தணி, திருச்சி, சேலம், வேலுார், கரூர், சென்னை ஆகிய இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டான, 37.7 டிகிரி செல்ஷியசுக்கு மேல், வெயில் பதிவானது.