பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள CBSE வினாத்தாள் வெளியான விவகாரத்தில் ஹிமாச்சல் பிரதேச ஆசிரியர் ஒருவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்!
CBSE 12-ஆம் வகுப்பு பொருளியல் பாடத தேர்விற்கு முன்னதாக வினாத்தாள் வெளியானதாகவும், அத்தேர்விற்கான மறுத்தேர்வு வரும் ஏப்ரல் 25 ஆம் நடைப்பெறும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
#CBSEPaperLeak: Three, including a teacher, clerk & support staff, arrested from Himachal Pradesh over the leak of XII class Economics paper which was leaked in handwritten form. pic.twitter.com/7D2AYdfOEC
— ANI (@ANI) April 7, 2018
கைது செய்யப்பட்ட 3 பேரின் விவரங்கள் குறித்து காவல்துறை தெரிவிக்கையில்... ஒருவர ஹிமாச்சல் ஆசிரியர் எனவும், அவருக்கு உதவியாக இருந்த மற்றொரு ஆசிரியர் மற்றும் அலுவளக உதவியாளர் என 3 பேர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட தேர்விற்கு 30 நிமிடம் முன்னரே வினாத்தாள் வெளியானதாகவும், கேள்விகளை கைப்பட எழுதி அதனை WhatsApp குழு மூலமாக பரப்பியதாக இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரல்-1 அன்று புறநகர் டெல்லி பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் ரிஸாப் மற்றும் ரோகித் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 53 மாணவர்கள் உள்பட 60 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர். சுமார் 6 WhatsApp குரூப்கள் இந்த வழக்கில் சம்பந்தப் பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளயாகியுள்ளது.
#CBSEPaperLeak...
கடந்த மாதம் 26, 28 தேதிகளில் நடைப்பெற்ற CBSE 12-ஆம் வகுப்பு பொருளாதார பாடம் மற்றும் 10-ஆம் வகுப்பு கணித பாட தேர்விற்கான வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னரே கசிந்தததாகவும், இவ்விரண்டு பாடத்துக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என CBSE அறிவித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய இடைநிலை கல்வி வாரிய செயலாளர் அனில் ஸ்வரூப் தெரிவிக்கையில்...
வரும் ஏப்ரல் 25-ஆம் நாள் ரத்து செய்யப்பட்ட CBSE, 12 ஆம் வகுப்பு பொருளாதார தேர்விற்கான மறுத்தேர்வு நடத்தப்படும் எனவும், 10 ஆம் வகப்பிற்கான தேர்வின் தேதி 15 தினங்களில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார், மேலும் 10 ஆம் வகுப்பிற்கான தேர்வானது டெல்லி மற்றும் ஹரியான பகுதிகளில் மட்டுமே நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பின்னர் 10 வகுப்பிற்கான மறுத்தேர்வு நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டது.
மேலும் CBSE 12-ஆம் வகுப்பு தேர்வு பாடமான ஹிந்தி பாட வினாத்தால் ஆனது WhatsApp, Youtube போன்ற சமூக வலைதளங்களில் வெளியானதாக கூறப்படும் தகவல்கள் உன்மை அல்ல எனவும் குறிப்பிட்டார்.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து, நடத்தப்பட்ட தேர்வினை ரத்து செய்வது ஏற்புடையது அல்ல, முன்னதாக நடத்தப்பட்ட தேர்வின் அடிப்படையிலேயே தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் எனவும், இந்த விவக்காரம் தொடர்பாக தனி குழு அமைத்து விசாரணை நடத்தி நல்ல முடிவினை எடுக்க வேண்டும் எனவும் SSC, NEET பயிற்சி மாணவர்கள் மற்றும் CBSE மாணவர்கள் போராட்டம் நடத்த தொடங்கினர்.
பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில்.. மார்ச் 31 அன்று ஜார்க்கண்டில் 9 சிறுவர்கள் உள்பட பயிற்சி மைய உரிமையாளர் என 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஏப்ரல் 1 அன்று காலை மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது ஹிமாச்சல் பிரதேசத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்!