வட தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில்:-
தென் கிழக்கு பகுதியில் வலுவிழந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து நிலவுகிறது. ஈரப்பதத்துடன் கூடிய கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் தென் இந்திய பகுதியில் சந்திக்கின்றன. இதனால், அடுத்த 24 மணி நேரத்தில், வட தமிழகத்தின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.