சென்னை கொடுங்கையூரில் சாலையில் கனமழையால் காரணமாக வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி நின்றதில், அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கியதில் இரு சிறுமிகள் (யுவஸ்ரீ, பாவனா) உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இந்நிலையில், சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 சிறுமிகளின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூரில் சாலையில் கனமழையால் காரணமாக வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி நின்றதில், அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கியதில் இரு சிறுமிகள் (யுவஸ்ரீ, பாவனா) உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இந்நிலையில், இன்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகள் யுவஸ்ரீ மற்றும் பாவனாவுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
நம் தேசப் பிதா மகாத்மா காந்தியின் 148-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. காந்தியின் கருத்துக்களை எடுத்துரைக்கும் வண்ணம், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில் நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் காந்தியை நினைவு கூறும் வகையில் பதிவிட்டுள்ளார். அதில், முதலில் நம்மை ஒதுக்குவார்கள், பின்னர் நம்மை பார்த்து நகைப்பார்கள். இதையடுத்து நம்மிடம் சண்டையிடுவார்கள். அதன் பின்னரே நாம் வெற்றியடைவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளான இன்று டெல்லியில் உள்ள அவரின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி.
Prime Minister Narendra Modi pays tributes to #MahatmaGandhi at Delhi's Rajghat #GandhiJayanti pic.twitter.com/YW7FvjBslE
உலகமெங்கும் ‘தரமணி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் ராம் இயக்கிய ‘தரமணி’ என்ற படத்தில் புதுமுகம் ரவி, ஆன்ட்ரியா, அஞ்சலி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரித்துள்ளார்.
‘தரமணி’ படத்தின் படபிடிப்பு நிறைவடைந்து பல மாதங்கள் ஆகி விட்டன. ஆனால் படம் வெளியாகுவதில் தாமதம் ஆகி கொண்டே வந்தது.
ஜெயலலிதா நினைனவிடத்தில் கண்ணீர் மல்க சசிகலா அஞ்சலி.
அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா நடராஜன் நாளை காலை கட்சி தலைமை அலுவலகத்தில் பதவி ஏற்று கொள்கிறார். இந்நிலையில் ஜெயலலிதா நினைனவிடத்தில் கண்ணீர் மல்க சசிகலா அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்தவர் ஜெயலலிதா. இவர் உடல் நலக்குறைவால் கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார்.
ஜெயலலிதா நினைனவிடத்தில் கண்ணீர் மல்க சசிகலா அஞ்சலி.
அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா நடராஜன் நாளை காலை கட்சி தலைமை அலுவலகத்தில் பதவி ஏற்று கொள்கிறார். இந்நிலையில் ஜெயலலிதா நினைனவிடத்தில் கண்ணீர் மல்க சசிகலா அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்தவர் ஜெயலலிதா. இவர் உடல் நலக்குறைவால் கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அன்றே ஓ.பன்னீர்செல்வம் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதனைதொடர்ந்து அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.
இயக்குநர் ராமின் 'தரமணி' படத்தின் புதிய டீசர் நேற்று வெளியிடபட்டுள்ளது. இயக்குனர் ராம் இயக்கி இருக்கும் மூன்றாவது திரைப்படம் தரமணி.
இந்த படத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் இரண்டாவது டீஸர் வெளியாகியுள்ளது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் தினமும் ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
ஜெயலலிதாவின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாத சிலர் கதறி அழும் காட்சியையும் பார்க்க முடிகிறது. வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான அதிமுக. தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் முதலா மாண்டு நினைவு நாளில் அவரது வெண்கல சிலை திறக்கப்பட்டது. மேலும் அறிவுசார் மையம், மணிமண்டபம் ஆகியவை அமைப்பதற் கான அடிக்கல் நாட்டப் பட்டது.
கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு டில்லி அமர்ஜவான் ஜோதியில் பாதுகாப்பு துறை அமைச்சர் பாரிக்கர் மற்றும் ராணுவ தளபதிகள் அஞ்சலி செலுத்தினர். நாடு முழுவதும் பல பகுதிகளில் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தன. 17 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் கார்கில் மலைப்பகுதியை ஆக்ரமித்த பாகிஸ்தானை, இந்திய ராணுவம் அடித்து விரட்டி மீண்டும் கைப்பற்றி வெற்றிக் கொடி நாட்டினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.