கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு டில்லி அமர்ஜவான் ஜோதியில் பாதுகாப்பு துறை அமைச்சர் பாரிக்கர் மற்றும் ராணுவ தளபதிகள் அஞ்சலி செலுத்தினர். நாடு முழுவதும் பல பகுதிகளில் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தன. 17 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் கார்கில் மலைப்பகுதியை ஆக்ரமித்த பாகிஸ்தானை, இந்திய ராணுவம் அடித்து விரட்டி மீண்டும் கைப்பற்றி வெற்றிக் கொடி நாட்டினர்.
"போரில் நமக்கு வெற்றிதான். ஆனாலும் விலைமதிக்க முடியாத நமது சகோதரர்களின் உயிரை இழக்க வேண்டியதாயிற்று. நாட்டு மக்களுக்காக இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், காயமடைந்த வீரர்களை கவுரவிக்கும் விதமாகவும் ஜூலை 26-ம் தேதி கார்கில் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
டிவிட்டர் பக்கத்தில் நரேந்தர மோடி வாழ்த்து கூறியுள்ளார்:-
We recall with pride, the firmness demonstrated by India’s political leadership in 1999, which ensured a decisive victory in Kargil.
— Narendra Modi (@narendramodi) July 26, 2016
India will never forget the fearlessness with which our courageous soldiers gave a befitting & unforgettable reply to the intruders.
— Narendra Modi (@narendramodi) July 26, 2016