உத்திரப்பிரதேச மாநிலத்தில் கட்டுமாண பணியில் இருக்கும் புதுக்கட்டிடம் ஒன்றின் கூறை இடிந்து விழுந்ததில் அங்கு பணியில் ஈடுபட்ட மக்கள் விபத்துக்குள்ளாகினர்!
நாகை அருகே பொறையாரில் போக்குவரத்து ஊழியர் ஓய்வு அறை கட்டடம் இன்று காலை இடிந்து விழுந்து 8 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.7.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து முதல்வர் பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கை:-
நாகை அருகே பொறையாரில் போக்குவரத்து ஊழியர் ஓய்வு அறை கட்டடம் இடிந்து விழுந்து 8 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
8 dead after roof of a Bus depot's rest room collapses in Tamilnadu's Nagapattinam, 3 people rescued from the debris pic.twitter.com/KpTT5JYE3w
— ANI (@ANI) October 20, 2017
திருச்சி மலைக்கோட்டை அருகே 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்ப்பட்டுள்ளது. கட்டட இடிபாட்டிற்குள் 6 குடும்பங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து நேற்று இரவு பெய்த மழை காரணமாக ஏற்ப்பட்டுள்ளது.
மீட்பு பணிகளில் போலீசார், தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். இடிந்த கட்டடத்தில் 6 வீடுகளில் குடும்பங்கள் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இன்று காலை 6 மணிக்கு இடிந்து விழுந்த கட்டடத்தில் இருந்து கார்த்திகா என்ற பெண் பலத்த காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
சென்னை தியாகராயநகரில் தீ விபத்திற்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
சென்னை தி.நகர் உஸ்மான் சாலையிலுள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 7 மாடி கட்டடங்கள் கடும் சேதம் அடைந்ததோடு, கோடிக்கணக்கான மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமானது.
தொடர்ந்து கட்டடம் வலுவிழந்ததால், அதை இடிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக, 'ஜா கட்டர்' இயந்திரமும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.