உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இந்தியா- நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 318 ரன்களும், நியூசிலாந்து 262 ரன்களும் எடுத்தன. 56 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.
இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 434 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 4-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 37 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 93 ரன்களுடன் அன்றைய ஆட்டம் முடிவு பெற்றது.
500-வது டெஸ்ட் போட்டி என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மிகவும் எதிர்பார்ப்புடன் களம் இறங்கிய இந்திய அணி வீரர்கள் யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விஜய் 65 ரன்கள், புஜாரா 62 ரன்கள் எடுத்தனர்.
நியூசிலாந்து அணி தரப்பில் போல்ட் மற்றும் வாங்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவில் விளையாட உள்ளது. நியூசிலாந்து அணி இம்மாதம் இந்தியா வர உள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் நியூசிலாந்து அணி செப்டம்பர் 16ம் தேதி முதல் 18-ம் தேதி வரை 3 நாள் பயிற்சி ஆட்டம் ஆட உள்ளது. பிறகு இந்தியாவுடனான டெஸ்ட் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.