ஜெயலலிதா உடல்நிலையை மக்களிடம் மறைத்தது மக்களிடம் பொய் கூறியது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம்தான் என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 22-ம் தேதி 2016-ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் டிச.21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 110-வது தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கதேவரின் 110-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, இன்று தேவரின் குருபூஜை நடைபெற்றது. இன்று காலை மதுரை வந்த தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க ஸ்டாலின் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்துக் கொண்டனர்.
மேதகு இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தமது உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :
தமிழ்நாட்டில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணித்து விடவேண்டும் என நினைக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் ஆதிக்கவெறிக்கு, வலிமையான எதிர்ப்புக் குரலை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்ட கண்டனம்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணித்து விடவேண்டும் என நினைக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் ஆதிக்கவெறிக்கு, வலிமையான எதிர்ப்புக் குரலை தி.மு.கழகம் பதிவுசெய்து, அத்தகைய முயற்சிகளை முறியடித்து வருகிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைதளத்தில் டெங்கு ஒழிய புதிய கருத்துக்களையும், தான் இதுவரை செய்த பணிகளை பற்றி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளது.
எனது கொளத்தூர் தொகுதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நேரில் ஆய்வு செய்தேன். கவுதமபுரம் பகுதியில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் பழுது பார்க்கும் பணிகளையும் நேரில் ஆய்வு செய்தேன்.
கடந்த 2 நாட்களுக்கு முன் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டிவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று மீண்டும் அரசியல் கட்சி தலைவர்களை கடுமையாக தாக்கி தனது டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில்,
சென்னையில் திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டது. சட்டப்பேரவை கூட்டப்பட்டால் செயல்படும் விதம் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தமிழக ஆளுநர் உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஏற்கனவே திமுகவினர் வழக்கு தொடர்ந்துள்ளது.
திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டப்பட்டால் செயல்படும் விதம் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தமிழக ஆளுநர் உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஏற்கனவே திமுகவினர் வழக்கு தொடர்ந்துள்ளது.
அதேசமயம் இன்று காலை திடிரென்று 18 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுத்து இருப்பதால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மூத்த வக்கீல்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
திண்டுக்கல்லில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதற்காக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு சென்றார்.
அதற்க்கு முன்பு அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி ஆட்சி, சட்டத்தை மதிக்காத ஆட்சி. சட்டத்தை மதிக்கும் அரசு ஊழியர்களை மதிக்கிறேன், பாராட்டுகிறேன். முறையாக நோட்டீஸ் கொடுத்து போராட்டம் நடத்துகிறார்கள்.
போராட்டம் நடத்துபவர்களை முதல்வரோ, துறை அமைச்சர்களோ அல்லது தலைமை செயலாளரோ அழைத்து பேசி சுமுக முடிவு எடுத்து இருக்க வேண்டும். அதை விடுத்து மிரட்டல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள்.
சேலம் மாவட்டம் கட்சராயன் ஏரியை தமிழக சட்டமன்ற செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 31-ம் தேதி பார்வை இடுவதாக அறிவித்து உள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள ஏறி, குளம் உள்ளிட்ட நீா்நிலைகளை தூா் வாறுவதற்கும், குறிப்பிட்ட அளவில் வண்டல் மண் எடுப்பதற்கும் தமிழக அரசு சார்ப்பில் விவசாயிகளுக்கும், மண்பாண்ட தொழிலாளா்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதே போன்று திமுக சார்பிலும் தமிழகம் முழுவதும் உள்ள ஏறி, குளம் உள்ளிட்ட நீா் நிலைகளை தூா்வாறுவதற்கு அக்கட்சியின் செயல் தலைவா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.
தமிழக அரசின் செயல்பாடு குறித்து ‘யுனெஸ்கோ’ அளித்துள்ள அவலச் சான்றிதழ் பற்றி திமுக கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுளதாவது:-
மக்களின் தாகத்தைத் தணிப்பதற்கான குடிநீரைக் கூட முறையாக வழங்கும் நிர்வாகத் திறனற்றதாக உள்ள தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, பாரம்பரியச் சின்னங்களான திருக்கோவில்களைப் பராமரிப்பதிலும் அலட்சியம் காட்டி, தமிழர்களின் பெருமை மிக்க வரலாற்று அடையாளங்களைச் சிதைத்து வருவதை ஐ.நா. அவையின் யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்ட இடைக்கால அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
டெங்கு காய்ச்சல் குறித்து பல்வேறு பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில், யாரும் டெங்குவை கண்டு பீதியடைய வேண்டிய தில்லை, என்று வாக்குறுதி அளிக்கும் சட்டமன்றத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். விஜய பாஸ்கர் அவர்களை நீக்கி விட்டு ‘முழு நேர’ அமைச்சரை சுகாதாரத்துறைக்கு நியமனம் செய்ய வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஓ.என்.ஜி.சி-க்கு எதிராக, கதிராமங்கலத்தில் மக்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர்.
இந்த களத்தில் அரசியல் தலைவர்கள், பல்வேறு துறை சார்ந்தவர்கள், கதிராமங்கலம் வந்து நேரடியாகத் தங்களது ஆதரவைத் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் இன்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கதிராமங்கலம் வந்துள்ளார். நேரடியாக போராட்டக் களத்துக்கு வந்துள்ள அவர், அங்கு போராடும் மக்களிடம் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் நடத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்து, அதனை நடத்திவரும் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என்று போலீஸில் புகார் கொடுக்கப்பட்டன.
இதையடுத்து நிருபர்களுக்கு கமல்ஹாசன் அளித்த பேட்டியில்., "என்னை கைது செய்தால், சட்டம் என்னைப் பாதுகாக்கும் என்று கூறியதுடன், தமிழகத்தில் அனைத்து மட்டங்களிலும் ஊழல் மலிந்து விட்டதாக குற்றம் சாட்டினார்.
கமலின் கருத்துக்கு சட்டத் துறை அமைச்சர் சண்முகம், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றுக்கு அஞ்சி, மத்திய அரசின் காலில் விழுந்து லாலி பாடும் நிலையில் தமிழக அரசு செயல் படுகிறது என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டிறைச்சி தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அதற்கு தமிழக சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்று சட்டசபை தொடங்கிய நாளன்றே, நான் சபாநாயகர் அவர்களின் கடிதம் கொடுத்திருந்தேன்.
அண்டை மாநிலங்களில் ஆற்று நீர் தடுக்கப்படுவதை கண்காணிக்க “நதி நீர் பாதுகாப்பு கமிட்டி” ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும் என திமுக கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது:-
தமிழ் மொழி கற்கும் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி சி.பி.எஸ்.இ. - ஐ.சி.எஸ்.இ. உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என திமுக கழக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதைக்குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை கூறியதாவது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.