கடந்த 8 நாட்களாக நீடித்து வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நேற்று இரவு வாபஸ் பெறப்பட்டது. வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால் இன்று காலை முதல் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது.
ஊதிய உயர்வு கோரி போக்குவரத்துத் ஆயிரக்கணக்கான போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், இந்தப் போராட்டம் 8வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, லாரி உரிமையாளர்கள் இன்று முதல் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை துவங்குகிறது. வெளி மாநிலங்கள் செல்லும் லாரிகள், நேற்று முதல் நிறுத்தப்பட்டன.
நாடு முழுவதும், மொத்தம் 93 லட்சம் லாரிகள் நிறுத்தப்படுவதால், தீபாவளி சமயத்தில் தேவையான பொருட்கள் விலை உயரும் அபாயம் உருவாகியுள்ளது.
நாட்டில், லாரிகள் வாங்கும் போதும், விற்கும் போதும், 28 சதவீதம், ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. இதனால், லாரி தொழிலில் நஷ்டம் ஏற்படுகிறது. இதை, ஒரு முனை வரியாக்க வேண்டும். உரிமம் வாங்கும் போதே, ஓராண்டுக்கான சுங்க கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.
தொடரும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டிள்ளது
மத்திய அரசின் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு, 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு தடை ஆகியவற்றை கண்டித்து தென் மாநில லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கினார்கள்.
இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய 6 மாநில லாரி உரிமையாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இன்று முதல் லாரி ஸ்டிரைக் தொடங்குகிறது. இதனால் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 18 லட்சம் சரக்கு லாரிகள் ஓடாது.
இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டண உயர்வு, ஆர்டிஓ அலுவலகங்களில் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30-ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக் நடைபெறும் என்று லாரி உரிமையாளர் அறிவித்தது.
இந்நிலையில் நேற்று டெல்லியில் மத்திய தரைவழி போக்குவரத்துதுறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர், தமிழக மாநில லாரி உரிமையாளர்கள் தலைவர் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுங்க சாவடி வரி வசூலை எதிர்த்து மார்ச், 30-ம் தேதி முதல் நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக் நடக்க உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த, நான்கு லட்சம் லாரிகள் பங்கேற்கும் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான வாட் (VAT) வரி உயர்வு நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதனால் லாரிகள் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். எனவே இந்த விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவர வேண்டும், பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர்ந்து 3-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பொதுத்துறை வங்கிகளை, தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டமிட்டபடி வரும் 29-ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெறும் என வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.