BSNL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலியான Wings என்னும் செயலியின் மூலம் இணைய வசதிகளை (Wifi, Mobile Data) கொண்டு பிற நெட்வொர்கள் எண்களுக்கு அழைப்புகளை ஏற்படுத்தலாம்...
Reliance Jio-ன் இலவச திட்டம், கால நீட்டிப்பு திட்டத்தினை அடுத்து BSNL தனது அனைத்து கோம்போ திட்டங்களிலும் 2GB கூடுதல் டேட்டா-வினை வழங்க திட்டமிட்டுள்ளது!
இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடியால் டெலிகாம் முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில், தற்போது ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக BSNL நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
BSNL அதன் புதிய ப்ரீபெய்ட் திட்டமான 'மேக்ஸிமம்' வாய்ப்பை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. புதிய ப்ரீபெய்ட் திட்டத்தில் விலை ரூ.999/- ஆகும். ரீ-சார்ஜ் செய்த தேதி முதல் - இரண்டு தொகுப்புகளாக ஒரு வருடம் முழுவதும் நன்மைகளை அளிக்கும்.
தொலை தொடர்பு நிறுவனத்தின் ஜாம்பவான் பிஎஸ்என்எல் ரூ.429 -க்கு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.
ஜியோ-வினை தொடர்ந்து அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.429 -க்கு அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
இந்த சலுகையின்படி 90 நாட்களுக்கு தினமும் 1 ஜிபி என்ற வீதம் 90 ஜிபி டேட்டா மற்றும் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் முழுவதும் இலவசம் என்ற அதிரடி சலுகையை கேரளாவை தவிர இந்திய முழுவதும் பயன்படும் வகையில் (PAN India) திட்டத்தில் அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் டெலிகாம் வாடிகையாளர்களை தன் கட்டுபாட்டில் வைத்துள்ள நிலையில் அதனை தகர்க்கும் முயற்சியில் பிஎஸ்என்எல் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
அதன்படி ரூ.74-க்கு அதிரடி சலுகையை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. இந்த சலுகை மூலம் 7 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 1 ஜிபி மொபைல் டேட்டா மற்றும் நாடு முழுவதும் இலவச வாய்ஸ் கால்களை வழங்குகிறது. ஆகஸ்ட் 3 முதல் 12 வரை மட்டுமே இந்த சலுகையை செல்லுபடி ஆகும் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
மாதம் ரூ.49 கட்டணத்தில் புதிய லேண்ட்லைன் வசதியை பி.எஸ்.என்.எல். அறிமுகம் செய்யகிறது.
பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் சேவைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் பிராட்பேண்ட் எந்திரங்களை கொண்டு வாடிக்கையாளர்களுக்கு இணைப்பு கொடுக்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் பயனடையும் வகையில் நாடு முழுவதும் குறைந்த செலவில் பேசும் வகையில் இலவச ரோமிங் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு கடந்த ஜூன் 1, 2015 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சலுகை ஓராண்டு வரை நடைமுறையில் இருக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.